பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எ ருக தி சுரிதகம் என்பது ஆசிரிய இயலானாதல் வெண்பா இயலா னாதல் பாட்டிற் கருதிய பொருளை முடித்து நிற்பது. எருத்தென்பது இரண்டடி யிழிபாகப் பத்தடிப் பெருமை. யாக வருவதோ ருறுப்பு. பாட்டிற்கு முகம் தரவாதலானுங் கால் சுரிதக மாதலானும் இடைநிலைப் பாட்டாகிய தாழிசையுங் கொச்சகமு மராகமுங் கொள்ளக் கிடத்தலின் எருத்தென்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராக வேண்டுமாதலான் அவ்வுறுப்புத் தரவைச் சார்ந்து கிடத்தல் வேண்டுமென்று கொள்க.த "தரவே எருத்த மராகங் கொச்சகம் அடக்கியல் வகையோ டைந்துறுப் புடைத்தே' என்பது அகத்தியமாதலின், தரவென்பதோருறுப்புங் கோடல் வேண்டு மெனின், இவ்வாசிரியர் கொச்சகம்’ என ஒதியவதனானே தரவும் அவ் விலக்கணத்திற் படுமென்பது ஒன்று." எருத்து என்பது இவ்வாசிரியர் கருத்தினால் தர வென்பது போலும்.4 முன்பக்கதொடர்ச்சி இடையிடையே எடுத்துக் காட்டுதலால் அவர் காலத்தில் அகத்தியம் முற்றிலும் இறந்தொழியாது சில சூத்திரங்களவிே வந்ததென்பது நன்கு புலனாகும். 1. ஆசிரியப்பாவின் இயல்பினாலாவது வெண்பாவின் இயல்பினாலாவது பாட்டிற் கூறிய பொருளை முடித்துக்கூறுவது சுரிதகம் என்னும் உறுப்பாகும். 2 . எருத்து என்னும் உறுப்பு இரண்டடி சிற்றெல்லையாகப் பத்தடி , பேரெல்லையாக வரும் தரவு என்னும் உறுப்பு பாட்டிற்கு முகமாகவும் சுரிதகம் அதன் காலாகவும் இடைநிலைப்பாட்டாகிய தாழிசை கொச்சகம் அராகம் என்பன இடையிலுள்ள ஏனையுறுப்புக்களாகவும் அமைந்து கிடத்தலானும் எருத்து என்பது கழுத்தின் புறத்திற்குப் பெயராதலானும் இங்குக் கூறப்படும் எருத்து' என்னும் உறுப்பு முகமாகிய தரவினைச்சார்ந்து அதன்பின் அமைதல் வேண்டும் எனக்கொண்டார் இளம்பூரணர். காலாகிய ایرانیان، லும் வழங்கி 3. இங்கு எடுத்துக்காட்டப்பெற்ற அகத்தியச்குத்திரத்தில் கொச்சகத்தின் வேறாகத் தரவு' என்பதோ ருறுப்புக் கூறப்பட்டதாயினும் ஆசிரியர் தொல்காப் பியனார் முதலுறுப்பாகக் கொச்சகத்தினைக் கூறியவதனால் முதலுறுப்பாகியதரவும் கொச்சகத்துள் அடங்கும் என அமைதி கூறலும் ஒன்று என்பதாம். 4. எருத்து என்பது இவ்வாசிரியர் கருத்தினால் தரவென்பதுபோலும் என இளம்பூரணருரையிற் காணப்படும். இத்தொடர், எருத்து என்பது இது’ என அவர் முன்னர் விளக்கிக் கூறிய விளக்கத்திற்கு முரணாப் ஐயம் விளைவித்தலின், இத்தொடர் பின்னர் ஏடெழுதுவோராற் சேர்த்தெழுதப்பெற்றதோ எனக் கருதவேண்டியுளது,