பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருகஉ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் பரிபாடற்கண் மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்படும். 'அதுதான் மலையே யாறே யூரென் றிவற்றின் • 35 நிலைபெறு மரபி னிங்கா தாகும் என்றாராகலின். இனிச் சுரிதகமின்றியும் பரிபாடல் முற்றுப்பெறும் “கொச்சக வகையின் எண்ணொடு விராஅய் அடக்கிய லின்றி அடங்கவும் பெறுமே” என அகத்தியனார் ஒதுதலின், (கக)ை இது, மேற்கூறிய வகையாற் பரிபாடற்கேற்ற பாவுறும் பினையெடுத்து விரிகூறி இத்துணை உள்ளுறுப்புடைத்தென்கின் றது; உள்ளுறுப்பெனக் கூறவேண்டுவதென்னை, பண்புபற்றி முப்பத்து நான்குறுப்பான் எண்ணப்படாவோவெனின், அவை எல்லாச் செய்யுட்கும் பொதுவாகலான் அவற்றோடெண்ணாது இவற்றை இப்பாவிற்குறுப்பாகக் கூறினானென்பது. மேல் வருகின்ற கலியுறுப்பிற்கும் இஃதொக்கும். (இ - ள்) செப்பிய நான்குறுப்புங் கலிக்குறுப்பாகச் சொல்லப்பட்ட வகையானே வரும் அவை ஈண்டும் (எ று) 'தனக் கென்றதனான் அவையல்லா உறுப்புமுள வென்பது முன்னர்ச் சொல்லுதும்; சொற்சீரடியும்’ (தொல் செய் - 122) என்புழிக் காண்க. கொச்சக மென்பது ஒப்பினாகிய பெயர். ஒராடையுள் ஒரு வழியடுக்கியது கொச்சகமெனப்படும். அதுபோல ஒரு செய்யுளுட் பலகுறள் அடுக்கப்படுவது கொச்சகமெனப்பட்டது. குறிலிணை 1. பரிபாடற்கேற்ற பாவுறுப்பாவன ஆசிரியம், வஞ்சி, வெண்பா, கலி என்னும் நான்குமாகும். 2. உள்ளுறுப்பென்பன கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என இச். சூத்திரத்தில் எடுத்துரைக்கப்பட்டவை. 3. பொதுவாய் நிற்றற்கும் உரித்து என மேற்குறித்த பாவுறுப்பு எல்லாச் செய்யுட்கும் பொதுவாகலான் அவற்றோடெண்ணாது கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்து என்னும் உள்ளுறுப்பாகிய இவற்றைப் பரிபாடற்குரிய சிறப்புறுப்பாக ஆசிரியர் எண்ணினார். 4. ஒாாடையுள் ஒரிடத்து மடித்து அடுக்கியல் அடுக்கு சொய்சகம் என வழங்கப்படும். அதுபோல ஒருசெய்யுளுட் பல குறள் அடுக்கி வருவது கொச்சகம் என்னும் உறுப்பாகும். எனவே இது ஒப்பினாகிய பெயர் என்றார்.