பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ; இ. அதி: தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் முப்பதும் பதினைந்து மெனத் தொக்குகிற்குச் அளவினவாகிய அடி மேலேறா வென்றவாறு. தொகுமளவென்னாது தொகுதி. நிலை யென்றான் மூன்று தொகையினும் முப்பதாகிய ఇణநிலைத்தொகையே கோடற்கென்பது. இன்னென்னும் ஐந்தா. முருபு நீக்கத்தின்கண் வந்தமையின் முப்பதேடியின் இகந்துவரும் அடி இல. வென்றவாறு. இனி, அம்முப்பத்தாகிய தொகுநிலை இவ்வைந்தற்கும் நீண்ட வடிக் கெல்லை யாதலின் தொகுநிலை யென்னாது அளவு' என்றானென்பது. நீண்டதனை அளவுடைத் தென்பவாகலின்.2 மற்றிங்கனம் இவை முப்பஃதடியின்மேல் வாராவென்று பெருக்கத்திற் கெல்லை கூறவே, சுருக்கத்திற் கெல்லை வரையறையிலவென்றானாம்; ஆகவே, இரண்டடி யானும் வருமென்றானாம் பிறவெனின்,- அற்றன்று; ஒரு பொருணுதலிவருங் கலிவெண்பாட்டாயிற் பன்னீரடி இகவா. தென்பது, திரிபின்றி வருவது கலிவெண் "கே செய்-153) என்றவழிப் போதுமாகலின், ஈண்டு ஒதிய கலிவெண் பாட்டுப்3 பதின்மூன்றடியிற் சுருங்கா தென்பது பெற்றாம். இது கைக்கிளைப் பொருண்மேல் வந்ததாயினும் ஒக்கும். ஒழிந்த நான்கும் மருட் பாவாதலான், "வெண்பா வாகி யாசிரிய வியவான் முடியவும் பெறும்’ (தொல்-செய்-119) என்றானாகலானும், "வெண்பா வியலினு மாசிரிய வியலினும் பண்புற முடியும்’ என வருகின்ற சூத்திரத்தானும், அவ்விரண்டு பாவின் கூட்டம் இரண்டடியால் வாரா வாகலானும் அவையும் நான்கடியிற் 1. கலிவெண்பாட்டு, கைக்கிளைச் செய்யுள், செவியறிவுறுTஉ, வாயுறை வாழ்த்து, புறநிலைவாழ்த்து என்னும் இவ்வைந்தற்கும். 3. அளவு' என்னுஞ்சொல் நீட்சி என்னும் பொருளில் ஆளப்பெற்றது. 3. சண்டோதிய கலிவெண்பாட்டு என்றது, ஒருபொருள் துதலாது வரும் கலிவெண்பாட்டினை. 4. பதின்மூன்றடியிற் சுருங்காமையாகிய இவ்வளவு, கைக்கிளைப் பொருள்பற்றி வரும் கலிவெண்பாவுக்கும். 5. மருட்பா, வெண்பாவும் ஆசிரியமுமாய் வரும் அவ்விரண்டுபாவின் கூட்டமாகிய