பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசும் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ ள்.) அம்மூன்று உறுப்பினையும் அடக்கி வருவது பிண்டம் (எ . று). அம்மூன்றனையும் உறுப்பெனவே, பிண்டமென்பனதாம் உறுப்பினவென்பது பெற்றாம். தொல்காப்பியமென்பது, பிண் டம்; அதனுள், எழுத்ததிகாரஞ் சொல்லதிகாரம் பொருளதிகார மென்பன படலம் எனப்படும்; அவற்றுள் ஒத்துஞ் சூத்திரமும் ஒழிந்த இருகூறுமெனப்படும். "தோன்றுமொழிப் புலவர் அது பிண்ட மென்ப" என்றதனாற் பிண்டத்தினையும் அடக்கி நிற்பது வேறு பிண்ட முளதென்பது. அது முதனூலாகிய அகத்தியமேபோலும்; என்னை? அஃது இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழென்னு மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின். (கள் உ} தச்சினார்க்கினியம் : இது பிண்டங் கூறுகின்றது. (இகள்.) சூத்திரமும் ஒத்தும் படலமுமென்கின்ற மூன்றுறுப் பினையும் உள்ளடக்கிய தன்மைத்தாய்வரின் விளங்கிய மொழி யையுடையபுலவ ரதனைப் பிண்டமென்று பெயர் கூறுவர். (எ.று) அம்மூன்றனையும் உறுப்பெனவே பிண்டமென்பது உறுப்பி யென்பதும் பெற்றாம் தொல்காப்பிய மென்பது பிண்ட, அதனுள் எழுத்துச் சொற்பொருளென்பது படலம், ஒத்துஞ் சூத்திரமு மொழிந்த விருகூறுமாம். தோன்றுமொழிப் புலவரென்றதனாற்: மிண்டத்தினையுமடக்கிநிற்பது வேறு பிண்டி யெனப்படும். அது 1. சூத்திரம், ஒத்து, படலம் என்னும் மூன்றினையும் உறுப்ப எனக் கூறவே அம்மூன்றினையும் உறுப்பாகக் கொண்டது, பிண்டம் என்னும் துரல் என்பது பெறப்படும். பிண்டமாக அமைந்தது தொல்காப்பியம். இதனுள் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்பன படலம் என்னும் உறுப்பாகும். நான்மரபு முதலியன ஒத்து என்னும் உறுப்பாகும். எழுத்தெணப்படுவ அகரமுத னகரவிறுவாய்' என்றாற்போல்வன சூத்திரம் என்னும் உறுப்பாகும். பிண்ட மாகிய தொல்காப்பியம் இயற்றமிழ் நூல். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்னும் மூன்று பிண்டத்தினையும் அடக்கிநிற்பது முத்தமிழிலக்கணமாகிய அகத்தியமாதலின் அது பிண்டத்தினையடக்கிய பிண்டம் எனப்பட்டது. 2. தாம்கூறக்கருதிய பொருள் தானே வெளிப்படத் தோன்றும் மொழியினால் நூல் செய்யவல்ல புலவர் என்பார் தோன்று மொழிப்புலவர் ' என்றார் ஆசிரியர்,