பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அவ்வகையுமன்றிவரும் உரைத்திறன் ஈண்டு உரையெனப்பட்டது. அவையாமாறு : "ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் என்னுங் குறிஞ்சிக்கவியுள், 'இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து’ (கலித்.ருக) என்றது உரை குறிப்பு. ‘ஒருஉ, கொடியியல் நல்லார்’ என்னும் மருதக்கவியுள், 'கடியர் தமக் கியார்சொலத் தக்கார் மற்று” (கலித்அஆ) என்றது.மது. சிலப்பதிகாரத்து ஆய்ச்சியர் குரவையுள், “கயலெழுதிய இமயநெற்றியின், அயலெழுதிய புலியும் வில்லும் நாவலந்தண் பொழின்மன்னர் ஏவல் கேட்பப் பார்அர சாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலும். காலை முரசம் கனைகுரல் இயம்புமாதலின் நெய்ம்முறை நமக்கின் றாகுமென ஐயைதன் மகளைக்கூஉய்க் கடைகயிறு மத்துங்கொண் டிடைமுதுமகள் வந்துதோன்றுமன்’ (சிலப்.ஆய்ச்சியர் குரவை) என்றது.மது. பாவின்றெழுந்த கிளவியானும் என்பது - பாக்களை யொழி. யத் தோற்றிய சொல்வகையானும் உரையாம் என்றவாறு, அஃதாவது, வழக்கின்கண் ஒருபொருளைக் குறித்து வினவுவாருஞ் செப்புவாருங் கூறுங் கூற்று. அதுவும் இலக்கணம் பிழையாமற் கூறவேண்டுதலானும் ஒரு பொருளைக் குறித்துச் செய்யப் படுதலானுஞ் செய்யுளாம். இதனைக் குறித்தன்றே செப்பும் வினாவும் வழாஅ லோம்பல்” (தொல், கிளவியாக்கம். கங்) என்பது முதலாகக் கூறப்பட்ட இலக்கணமெல்லாம் என்று கொள்க, I இதனை என்றது. பாவின்றெழுந்த கிளவியாகிய உரைநடையினை.