பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ ஆ இ. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - ೬೯೮೩97ಕ್ತಿ மற்றிது பிசியெனப் படாதோ வெனின்.இது பாட்டுவடிவிற் றாகலின் அற்றன்றென்பது, அஃதேற் ப்ாட்டெனப்படாதோ வெனின்.-குறித்த பொருண் முடிய நாட்டாமையின் யாப் பழிந்து, நாற்சொல்லியலான் யாப்புவழிப் படாமையின் மரபும் அழிந்து, பிறவுறுப்புப் பலவுங் கொண்டமையிற் பாட்டெனவும் படாதென்பது. இஃது எழுத்து முதலாக ஈண்டிய அடியெனப் படாமையின் அதனையும் அடிவரையில்லனவற்றோடு ஒதினா னென்பது. அல்லாதார் குறிப்பிசைவந்த செய்யுளெல்லாங்? குறிப்பெனப்படுமென்ப, அங்ானங் கூறிற் குறிப்பிசையுடைய பாட்டினுள் வாராவாகிய செல்லுமென மறுக்க (க எக) நச்சினார்க்கி ரிையம் : இது முறையே கூற்றிடைவைத்த குறிப்புணர்த்துகின்றது. (இ-ள்.) எழுத்து முடிந்தவாற்றானுஞ் சொற் றொடர்ந்த வாற்றானுஞ் சொற்படுபொருளானுஞ் செவ்வன் பொருளறிய வரிதாகிப் பொருட்புறத்தே பொருளுடைத்தாயும் நிற்பது குறிப்பு மொழியாவது. (எ-று ) உ-ம். 'குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார் கையி னடக்கிய மூக்கினர் தாம்’ இது குஞ்சரமென்ப துணர்த்திற்று. இது கூறுகின்ற பொரு ளைக்கரந்து கூறப்பட்டு ஏது முதலியவற்றோடு புணராது நின்றது. இது பாட்டு வடிவிற்றாய் வருதலிற் பிசியெனலுமாகாது குறித்தபொருளை முடிய நாட்டினாற் சொல்லியலான்: யாப்புவழிப்படாமையின் மரபழிந்து பிறவுங்குறைதலிற் 1. இக்குறிப்புமொழி பாட்டு வடிவின காதலின் பிசியெனக் கூறப்படாது. குறித்த பொருளை முடிய நாட்டாமையின் யாப்பு என்னும் உறுப்பழித்தும், நாம் சொல்லியலால் யாப்பு வழிப்படாமையின் மரபு என்னும் உறுப்பழிந்தும் பிறவுறுப் புப்பலவுங் கொண்டமையாற் பாட்டெனவுங் கூறப்படாது. இஃது எழுத்து முதலா ஈண்டிய அடியளவினை யுடையது. அன்மையின் இதனையும் அடிவரையில் லாத செய்யுட்களோடும் சேர்த்துரைத்தார். ஆசிரியர். 2. குறிப்பிசை வந்த செய்யுளெல்லாம் குறிப்பு என வழங்கப்படும் என்பர் ஒருசாரார். அவ்வாறு கூறின் குறிப்பிசையுடைய பகுதிகள் அடிவரையறையுடைய பாட்டினுள் வருதலில்லை யென்பது ஏற்படுமாதலின் அவர் கூற்றுப்பொருந்தாது என மறுப்பர் பேராசிரியர். 3, நாற்சொல்லியலான், என்றிருத்தல் வேண்டும்.