பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எனக. .زئ. پ۶ئب پ9يي இது, பண்ணத்தி கூறுகின்றது. (இ-ன்). பழம்பாட்டினூடு கலந்த பொருளோ தனக்குப் பொருளாகப் பாட்டும் உரையும்போலச் செய்யப்படுவன பண் ணத்தி (எ.று). மெய்வழக்கல்லாத புறவழக்கினைப் பண்ணத்தியென்ப. இஃது எழுதும் பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி யென்பவென்பது. அவையாவன நாடகச்செய்யுளாகிய பாட்டும் மடையும் வஞ்சிப்பாட்டும் மோதிரிப்பாட்டுங் கடகண்டும் முதலாயின. அவற்றை மேலதேபோலப் பாட்டென்னா ராயினார், நோக்கு முதலாயின உறுப்பின்மையினென்பது. அவை (645) வல்லார் வாய்க் கேட்டுணர்க ! (#e3O) ஆய்வுரை இஃது, இசைநூலின் பாவினமாகிய பண்ணத்தி என்பதன் இலக்கணம் உணர்த்துகின்றது. 1. நல்லிசைப்புலவர் செய்யுள் வழக்கிற் பயிலுதலின்றி நாட்டுப்புறத்தே பொதுமக்களிடையே எழுத்துருப்பெறாது வழங்கிவரும் பாடல்களைப் பண்ணத்தி யென வழங்குதல் மரபு. எழுதும் பயிற்சி பெறாது நாட்டுப்புறத்தே செவிவழி யாக வழங்கிவரும் பண்ணத்திப் பாவாவன நாடகச்செய்யுளாகிய பாட்டுமடை முதலாயின. செய்யுளுக்கு இன்றியமையாத நோக்கு முதலிய சிறப்புறுப்புக்கள் அமையப்பெறாமையின் இவற்றைப் பாட்டு என்ற பெயரால் ஆசிரியர் குறித்திலர். மேற்குறித்த பண்ணத்தியாக நாட்டுப்புறப்பாடல்களில் பாட்டுமடை, வஞ்சிப் பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு என்பன நாடகத்தில் இடம்பெறும் இசைப் பாடல் வகையெனக் கருதவேண்டியுளது. பேராசிரியர் தம்காலத்து வழங்கிய பண்ணத்தியின் வகைகளாகத் தாம் குறித்த நாட்டுப்புறப்பாடல்களை அவைவல்லார் வாய்க்கேட்டுணர் க. எனக்கூறுதலின் அவர் காலத்தும் அப்பாடல்கள் எழுத்துருப்பெறாது நாடகத்துறையில் வல்ல ஒருசிலரால் மட்டும் பாடப்பெற்று வந்தன எனத் தெரிகிறது. அவை மக்களால் மறக்கப்பட்டு வழக்கிழந்த இக்காலத்தில் அவற்றின் இயல்புகளை உள்ளவாறு பகுத்துக்காணும் வாய்ப்பு இல்லாது போனது தமிழ் மக்களுக்கு மொழித்திறத்தில் நேர்ந்த ஒரு பெருங்குறையே யென்பதில் சிறிதும் ஐயமில்லை. 2. இச்சூத்திரங்களுக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை கிடைக்கவில்லை. இவற்றிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரைப்பகுதிகள் பேராசிரியர் உரையினையே பெரும்பாலும் அடியொற்றி யமைந்திருத்தல் வேண்டும்.