பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ பேராசிரியர் வெள்ளைவாரணனார் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும் உரைகளை நிரல்படுத்தித் தம் ஆய்வுரையை வழங்கியுள்ளார். இவை ஒன்பது தனித் தொகுதிகளாக வருகின்றன. மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தமிழியற் புலத்தினின்று நீங்கிய பின்னரும் தமக்கு இட்ட பணியை நிறைவேற்றும் கருத்தால், இறுதி இயல்களாகிய செய்யுளியலுக்கும் மரபியலுக்கும் உரைகளைத் தொகுத்தும் ஆய்வுரையை வகுத்தும் நல்கியுள்ளார். பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் இவ் ஆய்வுப் பணியின் சிறப்புத் தமிழ்கூறு நல்லுலகு உள்ளவரை நின்று நிலைக்கும் என்பதில் ஐயமில்லை. பேராசிரியர். டாக்டர். கதிர்மகாதேவன்