பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா என அ ஆ இ முறைமையினாற் சொல்லுதலாவது, பாடாண்பாட்டினைக் கைக்கிளைப்புறமெனவும், வஞ்சியை முல்லைப்புறமெனவும், வெட்சியைக் குறிஞ்சிப்புறமெனவும், வாகையைப் பாலைப்புற மெனவும், உழிஞையை மருதப்புறமெனவும், தும்பையை நெய்தற் புறமெனவும், காஞ்சியைப் பெருந்திணைப்புறமெனவும் ஒதிய நெறி கொள்ளப்படும். இவ்வாறு கொள்ளவே பதினான்கு திணையும் ஏழாகி யடங்குமாயின. (கஎன) இது, பதின்மூன்றாம் முறைமைக்கணின்ற திணையுறுப் புணர்த்து (313) கின்றது. (இ - ள்) கைக்கிளைமுதற் பெருந்திணையிறுவாய் எழும் முன்னர்க் கிளக்கப்பட்டன. (எ-று.) ‘முறைநெறி வகையான்’ என்பது அவற்றுக்கு முறைமை யாற் புறமெனப்பட்ட வெட்சி முதல் பாடாண் பகுதியிறாகிய எழுபகுதியோடு மென்றவாறு. எனவே, அவற்றுக்குப் பொது வாகிய முறையாற் கரந்தையுள்ளிட்டுப் பதினைந்து திணையுள் ஒன்று செய்யுட்குறுப்பாகி வரல் வேண்டுமெனவும், முன்னோதிய வாறே கொள்ளப்படுமெனவுஞ் சொல்லினானாம்; இது சொல் லாக்கால் அவை வரினும் வரும், வாராதொழியவும் பெறுமென் பது படுமென்பது. இது மேல்வருகின்ற கைகோண் முதலியன வற்றுக்கும் ஒக்கும்.2 (க அரு) நச்சினார்க்கிணி 1 ம் : இது நிறுத்தமுறையே திணை யென்னும் உறுப்புக் கூறுகின்றது. (இ.ஸ் ) கைக்கிளை தினையும் எ-து, கைக்கிளை முதலாக முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை 1. கைக்கிளை முதலா ஏழ்பெருந்திணையும் அகத்திணையுமே இங்குக் கிளந்துரைத்தாராயினும் முறையே அவற்றின் புறமாகிய பாடாண், வஞ்சி, வெட்சி, வாகை, உழிஞை, தும்பை காஞ்சி யென்னும் புறத்தினையேழும் சேரப். பதினான்கு திணையும் இங்குக்கூறிய எழுதினையாயடங்கும் என்பதாம். 2. அகமும் புறமுமாகிய திணையென்பன முன்னர்க்கூறப்பட்டனவாயினும். செய்யுட்கு இன்றியமையாதவுறுப்பு இவையென இங்குக் சுறாக்கால் திணையுறுப்பு களாகிய அவை செய்யுளுள் வந்தாலும் வரலாம், வாராது போயினும் போகலாம் என்ற நிலையேற்படும். அதுபற்றியே தினையென்பது மீண்டும் கூறப்படுகிறது. இவ்விளக்கம் பின்னர்க்கூறப்படும் கைகோள் முதலிய உறுப்புக்களுக்கும் பொருந்தும் என்பதாம்.