பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் "தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும் கடைப்புணைக் கொளினே கடைப்புனைக் கொள்ளும் புணைகை விட்டுப் புனலோ டொழுகி னாண்டும் வருகுவள் போலு மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை செவ்வரி துறழுங் கொழுங்கடை மழைக்கட் டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே” (குறுந்: 222) என்பது, தோழியிற் கூட்டம், பிறவம் அன்ன. (கஅசு) நச்சினார்க்கினியம்: இது முறையே கைகோட் செய்யுட் குறுப்பாமாறு கூறுகின்றது. கைகோளாவன களவு கற்பு. அவைதாங் காமத்தின்கண் ணெழுதலான் அவற்றுட்பிறந்த வுள்ளநிகழ்ச்சி யிடைவிடாது மேற்சிறந்து பெருகி யகலாப்பகுதியெனக் கொள்க. அவற்றைத் தொகுத்தவை செய்யுட் குறுப்பென்றார். (இ-ள்) காமப் .....புணர்வும் எது இயற்கைப்புணர்ச்சியும் அதன் பின்ன ரிடந்தலைப்பாடும், அதன்பின்னர் அவன்வயிற் பாங்காகிய பாங்கற்குக் கூறி யவனாற் கூடுதலும், அதன்பின்னர் அவள்வயிற் பாங்காகிய தோழியை யிரந்து குறைமுடித்துக் கோடலும். என்று......சார்பொடு எது என்ற அந் நாற்பகுதிக் கண்ணும் பொருந்திய சார்பினால், மறை ... ... ராறே எ-து களவொழுக்கம் இதுவென்று பிறர்கருதச் செய்யுள் செய்தல் கந்திருவவழக்கம். எறு. கந்திருவர்க்கு மறையோர் ஒதிய நெறி அதுவாகலின் மறை யோராறென்றார். என வினையெச்சம். எனவே பாங்கனுந் தோழியு முணர்ந்துழியுங் களவென்றல் மறையோர்வழக்கு. எ-று. இக்களவு இல்லதன்றி யுலகியலாதலின் நிறையுடையார் மறைவெளிப்படாதொழுகலிற் றாமேசென்று இடந்தலைப் 1. களவொழுக்கம் இல்லது இனியது நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டது என்னும் இறையனார் களவியலுரையினை மறுத்து இஃது உலகியலின் உண்மையான ஒழுக்கமே என வற்புறுத்து வார் இக்களவு இல்லதன்றி உலகியலாதலின்' என்றார் நச்சினார்க்கினியர். யாழோர் கூட்டம் உலகியலாதலான் இல்லது அன்றாம்' எனவரும் பேராசிரியர் உரைத்தொடரும் இங்கு நினைத்தற்குரியதாகும்.