பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

త్థ ఢీ క్లే " தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் ளளக மறைவெளிப் படுதலுந் தமரிற் பெறுதலும்! இவைழுத லாகிய இயனெறி திரியாது? மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்: பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே. இனாம்பூரணம்: என்-எனின். கைகோள்வகையிற் கற்பாகிய உணர்த்துதல் நுதலிற்று. (இ-ஸ்.) களவொழுக்கம் வெளிப்படுதலுங் களவொழுக்க மின்றித் தமரானே பெறுதலுமென்று சொல்லப்பட்ட இவை முதலாகிய இயற்கை நெறியிற் றப்பாது மகிழ்தலும் புலத்தலும் ஊடலும் ஊடல் தீர்தலும் பிரிதலுமென்று சொல்லப்பட்ட இவற்றொடு கூடிவருவது கற்பென்று சொல்லப்படுவது என்ற வாறு. இயனெறி என்றதனாற் கரணத்தின் அமைதல் இன்றியமை (கன்க) கைகோள் யாதென்று கொள்க. இது, கற்பென்னுங் கைகோளுணர்த்துத னுதலிற்று. (இ - ள்.) மறைந்தொழுகும் ஒழுகலாறு வெளிப்படுதலும் அதன்பின் தமர் கொடுப்பத் தான் அவ்வகையாற் பெறுதலு மென்னும் இவ்விரண்டும் முதலாகிய வழக்குநெறி திரியாது மகிழ்ச்சியும் புலத்தலும் ஊடலும் உணர்தலு மென்னும் நான் குடன் பிரிவுளப்பட ஐந்தும் புணர்ந்தது கற்பென்னுங் கை கோளாம் (எ . று). "இவை முதலாகிய வென்றதனால், “கொடுப்போ சின்றியுங் கரண முண்டே புணர்ந்துடன் போகிய காலை யான’ (தொல்-கற்: 2) என்றவழிக் கூடிய வதுவைபோல்வன கொள்க. அவைதாங் கற்பெனப்படுவதல்லது ஒழுகலாறெனப்படா; என்னை? இவ ரொழுக்கமன்றி வேள்வியாசான் முதலாயினார் செய்விக்கும் 1. மறை-களவு. தமரிற் பெறுதல்-சுற்றத்தாரால் மணஞ் செய்து கொடுக்கப் பெறுதல். 2. இரு முதலாகிய என்பது நச்சினார்க்கினியர் உரையிற் கண்ட பாடம். 3. மலிவு-மகிழ்ச்சி. புலவி-காதலரிருவரிடையே சிறிதுநேரம் அன்பினால் நிகழும் பிணக்கம். ஊடல்-காலம் நீட்டித்து நிற்கும் பிணக்கம்.