பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/722

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ள அம் தி கி கி. கருதிக்கொண்டு உய்ப்பதோர் உள்ள நிகழ்ச்சி. ஊடல் என்பது, உள்ளத்து நிகழ்ந்ததனைக் குறிப்பு மொழியாலன்றிக் கூற்று மொழியால் உரைப்பது. உணர்வு என்பது, அங்ங்னம் ஊடல் நிகழ்ந்தவழி அதற்குக் காரணமாகிய நிகழ்வு எதுவும் இல்லை யென்பதனைத் தலைவி உணரும்படிச் செய்தல். இல்லாததனை உண்டோ எனத் தலைவி ஐயுற்ற மயக்கந்திரத் தலைவன் உணர்த்துதலால் உணர்த்துதல் எனவும், அதனைத் தலைவி உணர்தலால் உணர்வு எனவும் இது வழங்கப்படும் புலவியாயின் தலைவியது உள்ளங்குளிர இன்னுரை பகர்தலும் அவளது உடல் தளிர்ப்ப அணைத்தலும் முதலாயவற்றால் நீங்குதலின் புலவிக்கு உணர்த்துதல் வேண்டா என்பர். பிரிவு என்பது, இவை நான் கினோ டும் வேறுபடுதலின் பிற்கூறினார். இதனை ஊடலொடு சேர்த்துக் கூறவே ஊடலிற் பிறந்த துணியும் பிரிவின்பாற்படு மென்று கொள்ளப்படும். துணித்தல் என்பது வெறுத்தல். அஃதாவது தலைவன் தன்பால் தவறின்மையினைப் பல்வேறு வகையினால் எடுத்துக்காட்டவும் அதனை ஏற்றுக் கொள்ளாது மறைந்து மாறும் இயல்பினதாகும். அறுவகைப் பிரிவும் பிரிவெனவே அடங்கும் என்பர் பேராசிரியர். ள அம் மெய்பெறும் அவையே கைகோள் வகையே. இனம் பூரணம் : என்- எனின். மேற்சொல்லப்பட்டவற்றைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பொருள்பெற வந்த மேற்சொல்லப்பட்ட களவு கற்பென்னும் இருவகையே கைகோள் வகையாவன என்றவாறு. ஏகாரந் தேற்றம். (அகC) பேராசிரியம்: இது, புறத்திணைக் கைகோ ளுணர்த்துகின்றது. (இ-ள்.) பொருள்கள் பெற்ற கைகோட்பகுதி அகத்திணைக் கைகோளே (எ று). 1. மெய்பெறு வகையே' எனப் பேராசிரியரும் மெய்பெறவவையே. என நச்சினார்க்கினியரும் பாடங் கொள்வர். மெய்பெறுதல் பொருள் பெற வருதல், அவையென்றது களவுகற்பு என்னும் இரண்டிளை. கைகோள்-ஒழுகலாறு.