பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் நூற்பா - அ.உ இ. தி இ' 'தொன்னெறி மரபிற் கற்பு என்றதனான் அவர் குலந்தோறுந் தொன்றுபட்டு வருகின்ற நெறியையுடைத்தென்று கொள்க. (க.அ.உ) இதுவுமது (இ ள். இவ்வெண்ணப்பட்ட எல்லாருஞ் சொல்லிய சொல்லாகச் செய்யுள் செய்யப்பெறுங் கற்பினுள் (எ-று). 'முன்னுறக் கிளந்த கிளவி யென்பது, பொருணோக்கிற்று. இசையின் பின்னரது நாடகமாகலிற் பாணண்பின் கூத்தனை வைத்தும், பெண்பாலாகலான் விறல்பட ஆடும் விறலியைக் கூத்தன்பின் வைத்தும், அவ்வினத்துப் பரத்தையரை அதன்பின் வைத்தும். பொருட்குச் சிறந்தாராகலின் நற்பொருள் உணரும் அறிவரை அவர் பின் வைத்தும், ஏதிலராகிய கண்டோரை அவர்க்குப்பின் வைத்துங் கூறினானென்பது. இவ்வாற்றான் இவரோடு முன்னர்க் களவொழுக்கத்திற் கூறிய அறுவருங் கூறப் பெறுவரென்றவாறு. தொன்னெறி மரபின்' என்றதனாற் t) கனுந் தூதனுங் கூறவும் அமையும். அவை புறப்பொருட்குச் சிறந்துவரும்; அவற்றுக்குச் செய்யுள்: செல்வழி நல்யா ழிசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திப் வையுண் மெய்நிறுத் தவர்திறஞ் செல்கவெனக் கண்டனென் யானே.” என்பது, பாணன் கூற்று. (அகம் 14) 'ஆட விற் பயன்றனை யென்னா தென்னுரை யூடலிற் றெளிதல் வேண்டும்” என்பது, கடித்தன் கற்று. 'மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து நிறங்கண் ணியன்கொ னோகோயானே (நற்றிணை: 394) என்னும் நற்றிணைப்பாட்டுக் கண்டோர் கூற்று. கற்பியல் வாழ்விற் கூற்று நிகழ்த்தற்குரியராகத் தொல்காப்பியனார் குறித்த பன்னிருவரோடு பாகன், தூதன் என்போரும் கற்பியலில் ஒரோவழி கூற்று நிகழ்த்துதற் குரியரென்பதும் அவர்தம் கூற்றுப் புறப்பொருட்குச் சிறந்து வரும் என்பதும், இச்சூத்திரத்தில் தொன்னெறி மரபின் கற்பு எனவரும் அடைமொழியாற்கொள்ளப்படும்.