பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்கஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் "விதையர் கொன்ற முதையற் பூழி மெல்லிறைப்பனைத்தோட் டுயிலமர்ந் தோயே’ (நற்றிணை: 121) என்னும் நற்றிணைப்பாட்டுப் பாகன் கூற்று. ஒழிந்தனவுங் கற்பியலுட் கூறியவாற்றான் அறிக: (ககC) நச்சினார்க்கினியம் : இதுவுமது அவ்வெண்ணப்பட்ட வறுவரும் பார்ப்பார் முதலாக முற். கூறிய அறுவரோடேகூடத் தொகுத்து இப்பன்னிருவருங் கூரிய கூற்றாகச் செய்யுள் செய்யப் பெறுங் கற்பினுள். எறு. கிளவியென்னுஞ்கொல் ஈண்டுப் பொருண்மேற்று. இசைப் பின்னரது நாடகமாதலின்: பூரணன்பின் கூத்தனும், பெண் பாலாகலின் விறல்பட ஆடும் விறலி அவர்பின்னும்,அவ்வினத்துப் பரத்தை அவர்பின்னும், அகப்பொருட்குச் சிறவாமையின் அறம். பொருள்கூறும் அறிவர் அவர் பின்னும், ஏதிலாராகிய கண்டோர் அவர்பின்னும் வைத்தார். தொன்னெறிமரபின் என்றதனால், பாகனும் தூது கூறலு மமையும் அவை புறப்பொருட்குச் சிறந்தன. "செவ்வழி நல்யா ழிசையினென் பையெனக் கடவுள் வாழ்த்திங் பையுண் மெய்ந்நிறுத் தவர்திறஞ் செல்வேன் கண்டனென் யானே' - (அகம்.கச) இது பாணன் கூற்று. 1. முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகைஇ' எனப்பேராசிரியர் உரையிற் காணப்படும் பாடத்தினையே நச்சினார்க்கினியரும் பாடமாகக் கொண்டார் என்பது இவ்வுரைத் தொடராற் புலனாகும். ஈண்டுக் "கிளவி என்பது கொல் என்ற பொருளிலன்றி அச்சொல்லாற் குறிக்கப்படும் பொருளாகிய அறுவரையும் உணர்த்தியது என்பார், "கிளவி யென்னுஞ்சொல் ஈண்டுப் பொருள் மேற்று: ' என்றார். முன்னுறக்கிளந்தகிளவி என்பதுபொருள் நோக்கிற்று என இப்பாடத்திற்குப் பேராசிரியர் தரும் விளக்கம் இவ்வுரைத் தொடருடன் ஒப்பு நோக்குதற் குரியதாகும்.