பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூஎ கருள் கால்வறேர் கையி னியக்கி நடைபயிற்றா வாலமர் செல்வ னணிகால் பெருவிறல் போல வருமென் னுயிர்” (கலி-அக) இவை போல்வனவற்றுள் அவ்வாறு காண்க. தலைவரு பொருளான் எனவே நோக்குறுப்பானுணர்ந்த பொருட்பிழம் பினைக் காட்டுவது மெய்ப்பாடாமென்றுகொள்க ! ஆய்வுரை : இது, செய்யுட்குரிய மெய்ப்பாடு என்னும் உறுப்பு உணர்த் துகின்றது. (இஸ்) யாதானும் ஒன்றைக் கூறியவழி அதனை ஆராய்ந். துணர்தலின்றிச் செய்யுளிடத்து வந்த அப்பொருள் தானே வெளிப்பட்டுத் தோன்றினாற் போன்று கண்ணிரரும்பல் மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலிய மெய்ப்பாடு தோன்றுமாற்றால் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடு என்னும் உறுப்பாகும் எ-று. செய்யுளின் பொருளை உணர்ந்தால் அதனாலே சொல்லப் படும் பொருள் கற்போர்க்கு எதிரே தோன்றினாற் போன்று அறிவதனை மெய்ப்பாடு என்றார் ஆசிரியர். அஃதாவது தேவருலகத்தைக் குறித்துக் கூறினாலும் அதனை நேரே கண்டாற் போன்று அறியச் செய்தல் மெய்ப்பாடு என்னும் செய்யுளுறுப்பாகும் எனவும், நோக்கு என்னும் செய்யுளுறுப்பினால் உணர்ந்த பொருளின் வடிவத்தைக் கற்போர் முன்னி லையிற் காட்டுவது மெய்ப்பாடு எனவும், அதுகுறித்தே கவி கண்காட்டும்' என அறிஞர் கூறுவர் எனவும் பேராசிரியர் தரும் விளக்கம் இங்கு உளங்கொளத் தகுவதாகும். ள கூ எ. எண்வகை இயனெறி பிழையா தாகி முன் னுறக் கிளந்த முடிவின ததுவே. இனம் பூரண ம் : என் - எனின் மெய்ப்பாடாவது உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்.) அது நகை முதலாகிய எட்டு மெய்ப்பாட்டு நெறி. யையும் பிழையாதாகி மேற்சொல்லப்பட்ட இலக்கணத்தை யுடைத்து என்றவாறு: அஃதாமாறு மெய்ப்பாட்டியலுட் காண்க. (கக ைஎ) 1. இது பேராகியருாையிற் காணப்படும் உரை விளக்கமாகும். 2. எண் வகை இயல்நெறியாவது, நகைமுதல் உவகையீறாக மெய்ப்பாட்டியலிற் கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளின் இலக்கணமுறைமை,