பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/800

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உகச ః = శ్రీ : ஆய்வுரை : இது, குறுஞ்சிர் வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ-ஸ்) குற்றெழுத்துப் பயின்று வருவது குறுஞ்சீர் வண்ணம் எனப்படும் எ.று. குறுஞ்சீர் - குற்றெழுத்துப் பயின்று வருஞ்சீர். உக ச. சித்திர வண்ணம் நெடியவுங் குறியவும் நேர்ந்துடன் வருமே. இளம்பூரணம் : என் - எனின். சித்திர வண்ணம் ஆமாறு உணர்த்துதல் துதலிற்று (இ-ஸ்) சித்திர வண்ணமாவது நெட்டெழுத்துங் குற்றெழுத் தும் சார்ந்துவரும் என்றவாறு. “ஒருர் வாழினுஞ் சேரி வாரார் சேரி வரினும் ஆர முயங்கார்” (குறுந். உங்க) என வரும். (க.உ.சி) பேராசிரியம் : (இ, ள்) சித்திரவண்ணம் நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் ஒப்ப விராஅய்ச் செய்யப்படுவது (எ-று,) அது, "சார னாட நீவர லாறே” என வரும். சித்திரவண்ணமென்பது பலவண்ணம்படச் செய்வதாகலின் அப்பெயர்த்தாயிற்று.2 (உ.உ.உ) நச்சினார்க்கினியம்: இது சித்திரவண்ணங் கூறுகின்றது. (இ-ள்.) சித்திரவண்ணமாவது நெட்டெழுத்துங் குற்றெழுத்தும் ஒப்பவிராய்ச் செய்வது. எறு. 1. சேரி, ஆர என்றாற் போன்று நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒத்து வருஞ் சீர்களால் இயன்றது. சித்திரவண்ணமாகும், 2. சித்திரம்-ஒவியம், ஓவியம் போன்று பலவண்ணம் பொருந்தச் செய்யப். படுதலின் சித்திரவண்ணம் என்னும் பெயர்த்தாயிற்று. நேர்தல்,தம்முள் ஒத்தமைதல்.