பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/813

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ00உ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் "நன்னன் ஏற்றை நறும்பூணத்தி $ துன்னருங் கடுந்திறற் கங்கன் கட்டி’ (அகம்: 44) என்றாற் போல்வன. 'துதலுந் தோளுந் திதலை யல்குலும் (அகம்: 119) என்பதும் அது (உ.உ.அ) நச்சினார்க்கினியம் :* இது எண்ணுவண்ணங் கூறுகின்றது. (இ-ஸ்.) எண்ணு வண்ணமாவது அடிக்கண்ணே பயின்று வருவது. எ-று: இது காரணப்பெயர் "நன்ன னேற்றை நறும்பூணத்தி துன்னருங் கடுந்திறற் கங்கட் கன்டி பொன்னணி வல்விற் பொன்றுறை யென்றாங்கு” (அகம் சச) எனவரும். "நாள்கோ டிங்கண் ஞாயிறு கனையழல்” (பதிற்று-இரண்டு. கச) “நுதலுந் தோளுந் திதலை யல்குலும்” (அகம்-கககூ} என்பதுமது, ஆய்வுரை : இஃது, எண்ணு வண்ணம் ஆமாறு கூறுகின்றது. (இ.ஸ்) எண்ணுதற் பொருண்மை பயின்று வருவது எண்ணு வண்ணம் எனப்படும் எ-று. (உ-ம்.) நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன் புலனாய மைந்தனோ டெண்வகையாய் புணர்ந்து நின்றான் எனவரும். (திருவாசகம்) 1. எண்ணுவண்ணமாவது அடிக்கண்ணே எண்ணுப் பயின்று வருவது எ-று என்றிருத்தல் வேண்டும். 'எண்ணுவண்ணம் என்பது, செவ்வெண்ணினாலும் உம்மை யெண்ணினாலும் எனவெண்ணினாலும் என்றா வெண்ணினாலும் பிறவும் யாதானுமோர் எண்ணினாலும் வருவது என்பர் யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர்.