பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அ கரு (இ-ன்.) மேற்கூறி வருகின்ற குற்றுகர முற்றுகரங்கள் ஒற்றொடு நிற்கவும் பெறும்; அவ்வொற்றுத் தோன்றிய ஒற்றாயின் (எ-று). எனவே, நிலைமொழி ஒற்றுடையவாயின் அவை நேர்பும் நிரையுமா.கா. வருமொழி வல்லெழுத்துமிகினே யாவதென்றவாறு. அஃதென்னை பெறுமாறெனின், 'வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருமொழி' (தொல். எழுத். குற்றிய. 4) என்றதனான். முன்னர் நிலைமொழித் தொழிலாகிய முற்றுகரம் வருமெனக் கூறிய அதிகாரத்தானே ஒற்றுத் தோன்றினென்றா னாகலானும் பெறுதும்: நிலைமொழியுகரம் பெற்று வருமொழி ஒற்றெப்துவது கண்டானாகலானென்பது.1 உ-ம்: "சேற்றுக்கா னிலஞ் செருவென்ற வேந்தன்வேல்” (யா. வி. ப. 236) எனவும், "நாணுத் தளையாக வைகி” (அகம். 29) எனவும், 'நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை’ (புறம், 125) எனவும், 'கனவுக்கொ னிகண்டது' (கலி. 90) எனவும் இவை இருவகையுகரமும் ஒற்றடுத் துரியசையாயினவாறு. உம்மை, எதிர்மறையாகலான் ஒற்றின்றி வருதலே பெரும்பான்மை. இங்ஙனம் வருமொழி யொற்றுமிகின் அவை கொண்டு நேர்பும் நிரையுமா மெனவே, 'உண்ணும்” எனவும், 1. குற்றியலுகரமும் முற்றியலுகரமும் ஒற்றொடு நிற்கப் பெறும்’ என்னாது, ஒற்றோடு தோன்றி நிற்கவும் பெறும்' என்றதனால், அங்ங்னம் இருவகை யுகரத்தினையும் அடுத்துத்தோன்றும் ஒற்றுக்கள் மொழிக்கண் இயல்ாகவுள்ள ஒற்றுக்கள் அல்ல எனவும் வல்லெழுத்து வருவழி நிலைமொழித் தொழிலாகிய புனர்ச்சிவகையால் தோன்றிய வொற்றுக்களே அவை என்பது மேற்குத்திரத்து நிலைமொழித் தொழிலாகிய முற்றுகரத்தை உரியசைக் குறுப்பாகக் கூறியதனாலும்புலனாம் எனவும் விளக்குவது இவ்வுரைப் பகுதியாகும் . 4.