பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፵፡ &ጅ” தொல்காப்பீயம் - பொருளதிகாரம் - உரை வளம் கால்’ எய்போற் கிடந்தானென் னேறு வேலாண் முகத்தகளிறு’ என இடையும் இறுதியும் நின்று நேர்பும் நிரையும் ஆமெனவும் இச்சூத்திரவுரையிற் பேராசிரியர் கூறிய விளக்கம் இங்கு மீண்டும் நினைவுகூர்தற்குரியதாகும். கூ குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும் ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே. இாைம்பூரணம் : என்-எனின். எய்தியது விலக்கல் துதலிற்று. (இ ள்.) இருவகை யுகரமும் ஒற்றொடு தோன்றித் தனி யசையாகி நிற்கவும் பெறுமென்றவாறு.1 உம்மை பிறந்தது தழlஇயிற்று.? உதாரனம் : 'படுகிளி யாவும் பசுங்குரல் ஏனல் கடிதின் மறப்பித்தா யாயின் இனி நீ நெடிதுள்ளல் ஒம்புதல் வேண்டும்.” (கலித், ருo) இதன்கட் குற்றியலுகரம் ஒற்றொடுவருதலான் நேரசையாயிற்று. "கண்ணும் படுமோ என்றிசின் யானே.” (நற்றிணை. சு.க) இதன்கண் முற்றியலுகரம் ஒற்றொடு வருதலான் நேரசையா யிற்று. (க) இஃது, எய்தாதது எய்துவித்தது; இயலசைகளை, 'ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி’ (தொல், செய். 3) என்றான், உரியசைக்கு அது கூறாதான் ஈண்டுக் கூறுகின்ற மையின்.8 1. ஈண்டு நிற்றல்' என்றது, அசைக்கு உறுப்பாமளவிலன்றித் தனியசை யாகி நிற்றலை. 2. முற்கூறியபடி இருவகையுகரமும் தேர்பு, திரைபு என்னும் அசைகட்கு உறுப்பாகிவருதலேயன்றி நேர், நிரை எனத் தனியசையாகி நிற்கவும் பெறும் என்றலின் நிற்கவும்' என்புழி உம்மை இறந்தது தழlஇய எச்சவும்மையாகும். 3. குறில், நெடில், குறிலினை, குறிசென்டில் என்பன தனித்து வந்து இயலசை யாதலேயன்றி ஒற்றுடன் வத்தும் இயலசையாகும் என்ற தொல் காப்பியனார் நேர்பு நிரைபு என்னும் உரியசைகளும் அவ்வாறு ஒற்றோடு தோன்றி நிற்றலுண்டு எனக்கூறுதலின் இஃது எய்தாது எய்துவித்தது எனக் - تیم است. مر :شم r. t தித்து கருத்துரை வரையப்பெற்றது.