பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா அ styr ski கிடந்தானென்னேறு (வெண்-வாகை.உ.உ) என இறுதிக்கண் உரியசையாய் நின்றவாறுங் காண்க. நாகுண்டு என்பது குற்று கரமாகாது.1 ஆய்வுரை : இது முற்றியலுகரத்திற்குரிய வேறுபாடுணர்த்துகின்றது. (இ-ள்) முற்றியலுகரமும் மொழி சிதைத்து நேர்பசை நிரைபசையென்று உரைக்கப்படாது; அஃது ஈற்றடிமருங்கில் தனியசையாகி நிற்றலும் இல்லை எ-று. "அங்கண் மதியம் அரவுவாய்ப் பட்டென' என்றவழி அரவு' என்பது மொழி சிதையாமையின் நிரைபு அசையாயிற்று. "பெருமுத் தரையர் பெரிதுவந் தீயும்” என்றவழிப் பெரு-முத்தரையர்” என்பதனைப் பெருமுத்தரையர்' எனப்பிரித்துச் சீராக்கின் மொழி சிதைதலின் நிரைபசை யாகாதாயிற்று என்பது இளம்பூரணர் தரும் விளக்கமாகும். இருவகையுகர மொடு நேரும் நிரையும் இயையின் அவை நேர்பும் நிரையும் ஆம் என்றார் ஆசிரியர். அவற்றுள் முற்றுகரம் ஈறாகிநிற்குஞ்சொல் உலகத்து அரியவாயின. ஆதலின் புணர்ச்சி வகையால் ஈற்றின்கண் தோன்றிய உகரமே ஈண்டு நேர்பும் நிரையும் ஆவன எனவும், அப்புணர்ச்சிக்கண்ணும் நானு' என்றாங்கு வரும் நிலைமொழித் தொழிலாகிய உகரமும், 'விழவு’ என்றாங்குவரும்நிலைமொழி பீறுகெட்டுநின்ற உகரமுமே கொள்ளப்படுவன எனவும், வருமொழித் தொழிலாகிய ஒற்று, 'நானுத் தளையாக விழவுத்தலைக் கொண்ட என்றாங்கு நேர்பு நிரைபுகட்கு உறுப்பாதல் போன்று நாண் உடை அரிவை நானுடையரிவை என்றாங்குவரும் வருமொழி முதலுகரம் இவ்வுரியசைகட்கு உறுப்பாகுமோ? என ஐயுற்றார்க்கு வருமொழி முதலுகரம் அங்ங்னம் உறுப்பாகாதெனவும், நீர்க்கு நிழற்கு” எனவரும் வேற்றுமையுருபு நிலைமொழித் தொழிலாதலால் அவ்வுறுப்புநேர்பசை நிரைபசைகட்கு உறுப்பாமென்பது இதனாற் பெறப்படும் எனவும், குற்றுகரமாயின் ஆட்டுத்தாள் சேற்றுக் 1. இத்தொடர் இச்சூத்திரவுரைப்பகுதியோடு தொடர்பின்றிக் காணப் படுகின்றது.