பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/827

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க0ககள் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் 'அடிநிமிராதெனவே அம்மையென்பது முழுவதும் ஒரு செய்யுளாகல் வேண்டும்: வேண்டவே, அஃது உறுப்பன்றாகிய செல்லும்; அதனை உறுப்பெனல் வேண்டுமாதலான் அடிநிமி ராதெனப்பட்ட செய்யுள் உறுப்பாக அவை பல தொடர்ந்து முடிந்து ஈண்டுச் செய்யுளாமென்பது. சிலவாகவென்பது, எண்ணுச் சுருங்குதல், மெல்லியவாதல், சிலவாகிய சொற்கள் எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தினான் வருவது. அடிநிமிராதென்றது. ஐந்தடியின் ஏறா தென்றவாறு. காயபனுவலோடென்றது, அறம்பொருளின்பமென்னும் மூன்றற்கும் இலக்கணஞ் சொல்லுப (போன்று) வேறிடையிடை அவையன்றியுத் தாய்ச்செல்வதென்றவாறு, அஃதாவது, பதி னெண் கீழ்க்கணக்கென வுணர்க. அதனுள் இரண்டடி யானும் ஐந்தடியானும் ஒரோ செய்யுள் வந்தவாறும், அவை சிலவாய மெல்லிய சொற்களான் வந்தவாறும், அறம்பொருளின்பமென அவற்றுக்கு இலக்கணங் கூறிய பாட்டுப் பயின்றுவருமாறுங் கார்நாற்பது, களவழிநாற்பது முதலாயின வந்தவாறுங் கண்டு கொள்க. "பொருள்கருவி காலம் வினையிடனோ டைத்து மிருடீர வெண்ணிச் செயல்’ (குறள் 675) என்பது இலக்கணங் கூறியதாகலிற் பனுவலோடென்றான். 'மலர்கானின் மையாத்தி நெஞ்கே யிவள் கண் பவர்காணும் பூவொக்கு மென்று” (குறள் : க.க கஉ) என இஃது இலக்கியமாகலாற் றாயபனுவ லெனப்பட்டது. இவை தனித்துவரினும் அவ் வனப்பெனப்படும், தாவுக லென்பது, இடையிடுதல். இவ்விருவகையுஞ் செய்யுளெனப் படும். அம்மையென்பது குணப்பெயர். அமைதி பட்டு நிற்றலின் அம்மை யென்றாயிற்று. அதனுள் உறுப்பாகிய பாட்டுக் கடோறும் மாத்திரை யுறுப்பு முதலாகிய உறுப்பினுள் ஏற்பன பலவும் வருமாறும், இவ்வனப்பினுள் ஏற்பன பலவும் வருமாறும் அறிந்துகொள்க. (உருக.) 1. அடிநிமிர் வில்லது என ஒருமையாற் கூறினும் அங்க எம் அடிநிமிர். வின்றிவரும் செய்யுள் உறுப்பாக அச்செய்யுட்கள் பல தொடர்ந்துவரும் தொடர் நிலைக்கண் அடைந்ததே அம்மையென்னும் வனப்பாமெனக் கொள்க. { o ు. அறம் பொருள் - இன்பம் என்னும் மூன்றற்கும் இலக்கணம் சொல்லுதல் போன்று அமைதலும் அவையன்றி வேறிடையிடையே இலக்கியங்சுறுதல் போன்று அமைதலும் என இருவகை. -