பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#r తో; தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் “நடக்கும்” எனவும், நிலைமொழியொற்று நின்றவழித் தேமாவும் புளிமாவு மாவதல்லது நேர்பசையும் நிரையசையு மாகாதென்பதாம். 'விக்குள், கடவுள்' என்பனவும் அவை, (கC) நச்சினார்க்கினிையம் : இது உரியசைகள் ஒற்றுப்பெற்று நிற்குமென எய்தாத தெய்துவித்தது. இ-ள். குற்றியலுகரமும் முற்றியலுகரமும் எ-து முற்கூறிய குற்றியலுகரமும் முற்றியலுகரமும், ஒற்றொடு ... ... ... பெறுமே எது வருமொழி வல்லெழுத்து வரும் வழி வல்லொற்றொடு தோன்றி நிற்கவும் பெறும் எறு. உதாரணம் :- சேற்றுக்கானிலம்’, ‘நானுத்தளையாகவைகி', 'நெருப்புச் சினந்தணிந்த', 'கனவுக்கொ னிகண்டது” என இருவகை உகரமும் ஒற்றடுத்து உரியசையாயினவாறு காண்க. உம்மை எதிர்மறையாதலின் ஒற்றடாது வருதலே பெரும்பான்மை யென்றுணர்க. நிலைமொழி ஒற்று மிக்கு உண்ணும், நடக்கும் என்பன தேமா புளிமாவாயே நிற்கும்; விக்குள், கடவுள் என்பனவும் அவை. ஆய்வுரை : இஃது உரியசைக்கு எய்தாதது எய்துவிக்கின்றது. (இ~ள்) உரியசைக்கு உறுப்பாய் வருமெனப்பட்ட குற்றியலுகரமும் முற்றியலுகரமும் தம்பின்னர் ஒற்றொடுக.டி நிற்றலையும் பெறும் : (அவ்வொற்று வருமொழிப் புணர்ச்சியால் நிலை மொழிக்கண் தோன்றிய ஒற்றாயின்) எ-று. 'ஒற்றொடு நிற்கப் பெறும் என்னாது ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறும் என்றமையால் அவ்வுகரங்களின் பின்வரும் ஒற்று நிலைமொழியீற்றின் இயல்பாகவுள்ள ஒற்று அன்றென். பதும், வருமொழி வல்லெழுத்து மிக்குத் தோன்றிய ஒற்றென். பதும் உய்த்துணர வைத்தாராயிற்று. உ. ம். சேற்றுக்கால், நானுத்தளை, நெருப்புச்சினம், கனவுக் கொல்-என இருவகையுகரமும் ஒற்றோடு தோன்றி நேர்பும் 1. நிற்கவும் என் புழி உம்மை எதிர்மறையாகலான் ஒற்றடாது நிற்றலே பெரும்பான்மை என்பத7 ம்.