பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/836

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் நூற்பா - உக ம் கOஉரு என்றவழித் தேவபாணியுங் காமமும் பொருளாக வன்றியுங் கொச்சகக்கலி வருமென்றானாகலான் அவை மேல் வருதல் ஈண்டுக் கொள்ளப்பட்டது. (இபள்) இழுமென் மொழியான் விழுமியது துவலினும் . மெல்லென்ற சொல்லான் அறம்பொருளின்பம் வீடென்னும் விழுப்பொருள் பயப்பச் செய்வன; அவை செய்த காலத்துள்ளன கண்டிலம்; பிற்காலத்து வந்தன கண்டுகொள்க. பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும்-ஆசிரியப் பாட்டான் ஒரு கதைமேல் தொடுக்கப்பட்டன; அவை பொருட்டொடர்நிலை. தோல் என மொழிப தொன்மொழிப் புலவர்.தோலென்று சொல்லுப புலவர் (எ-று). 'தொன்மொழி யென்றார் பழைய கதையைச் செய்தல். பற்றி; இது முன்வருஞ் சூத்திரத்தானும் பெறுதும். (உங்அ) நச்சி ை ர் க் திணியம் இது தோல் கூறுகின்றது. அஃது இருவகைய, கொச்சகத் தானும் அகவலானுஞ் செய்யப்படுவனவாம். (இ.கள்.) இழுமென்னு மோசையையுடைய மெல்லென்ற சொல்லானே அறம் பொரு வளின்பம் வீடென்னும் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும் ஆசிரியப்பாட்டான் ஒருகதைமேற் றொடுப்பினுந் தோலென்று கூறுவர் பழநெறியை யறிந்த புலவர் எ.று.2 1. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள் பயப்ப மெல்லெனும் இனிய சொல்லமையக் கொச்சகக் கலியினாற் செய்தலும் பரந்து விரிந்த சொல்லமையை ஆசிரியப்பாட்டாற் செய்தலும் எனத் தோல் என்னும் வனப்புடைய பொருட்டொடர் நிலை இருவகைப்படும் என்பதாம். 2. தோல் என்பது, இழுமென்று மெல்வியவாய சொற்களால் விழுமிய வாய்க் கிடப்பனவும், எல்லாச் சொற்களோடுங் கூடிய பலவடியை உடையன வாய்க் கிடப்பனவுங் என இரண்டு வகைப்படும்' என்பர் யாப்பருங்கலவிருத்தி யாசிரியர், செய்யுளியலின் கண்ணே ஆசிரியர் பாவும் இனமுமென நான்கினிக்கிய பாவி. னைத் தொகை வரையறையான் இரண்டென அடக்கியும் விரிவரையறையான் ஆறென விரித்தும் அவற்றை அறம் பொரு எளின்பத்தாற் கூறுக வென்றுங் கூறிப் பின்பு அம்மை முதலிய எட்டு வனப்பும் தொடர்நிலைச் செய்யுட்கு இலக்கண