பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கOஉக தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் யாப்பினும் பொருளினும் வேற்றுமையுடையது (செய் க} என்றவழிப் பொருள்வேறுபட்டுக் கொச்சகத்தாற் செய்யப்படு வன தோலாம். எறு, இவை பொருட்டொடர். அவை சிந்தாமணி முதலியன. அவை பாவிற்கினமாகிய துறையும் விருத்தமும் பற்றிச் செய்தன வென்பார்க்கு அப்புலவர் செய்யுட் செய்கின்ற காலத்திற்கு நூல் தொல்காப்பியமாயவாறும் அவர் இனங் கொள்ளாதவாறும் அவ்வினங்கடாம் இலக்கணக் குறை பாடுடைய வாறுங் கொச்சகம்போற் சிறப்பின்மையும் முன்னர் விளங்கக் கூறியவற்றைக்கொண்டும் பின்பு செய்த நூல்கள் முன்பு செய்த செய்யுட்கு விதியாகாதவாறுங் கொண்டு மறுக்க ! பின்னோர் தாஞ்செய்த நூல்கட்கு அவை உதாரணமாகக் காட்டலின் அச்செய்யுள் அந்நூல்கட்கு முன்னாயவாறு முனர்க, இனித் தொல்காப்பியனாரை யொழிந்த ஆசிரியர் பதினொருவருட் சிலர் இனமுங்கொண்டார். அதுபற்றி யாப்பருங்கள் முதலிய வற்றிலும் இனங்கொண்டா ரென்பார்க்கு அவர்கள் அகத்திய னார்க்கு மாறாக நூல்செய்தவராவர். அவை வழிநூ லெனப்படா வென்று மறுக்க, இனி யாசிரியப்பாவான் அடிநிமிர்ந்து வந்தன தேசிகப்பா முதலியன. ஆய்வுரை : இது, தோல் என்னும் வனப்பு உணர்த்துகின்றது. (இ.ள்) இழுமென்னும் ஓசையையுடைய மெல்லென்ற சொல்லால் விழுமிய பொருள் பயப்பச் செய்யினும், பரந்த மொழியால் அடிநிமிர்ந்து வரத்தொடுப்பினும் தோல் என்னும் (முன்பக்கத் தொடர்ச்சி) மென்று கூறியவர், இழுமென்மொழியான் விழுமியது நுவலினும் பரந்த மொழியான் அடிநிமிர்ந்தொழுகினும் (தொல் செய்-உளஅ) என்பதனால், குவிந்து மெல்லென்ற சொல்லானும் பரந்து வல்லென்ற சொல்லானும் அறம் பொருளின்பம் பயப்ப வீடென்னும் விழுமிய பொருள் பயப்ப ஒருகதைமேற் கொச்சகத்தானும் ஆசிரியத்தானும் வெண்பா,வெண்கலிப் பாவானும் மற்றும் இன்னோரன்ன செய்யுட்களானும் கூறுக வென்றமையால், இத்தொடர்நிலைக் செய்யுள் அங்ங்னங் கூறிய தொடர்நிலையெனவுணர்க என அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரைப்பாயிரத்திற் கூறிய விளக்கம் எண்வகை வனப்பினுள் தோல் என்னும் வனப்பின் இயல்பினை இனிது புலப்படுத்துதல் இங்கு ஒப்புநோக்கி யுணரத்தகுவதாகும். 1. செய்யுளியல் விசி கூ-ஆம் சூத்திரவுரை நோக்குக.