பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఢీ ఇటీ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் மேல் (செய்-1) மாத்திரை யென்பதோர் உறுப்புரைத்தான்; அதனான் அசை சீர்களது ஓசையை அளந்து கூறுபடுத்து இன் னோசையும் இன்னாவோசையு முணர்த்துக. எழுத்தியல்வகைக்கும் இஃதொக்கும். “குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது கருப்புச் செறுப்புப் பரப்பு” (யா. வி. ப. 33, 181) எனின், வெண்பாவீற்றடி இன்னோசைத்தன்றாம்.

  • *

"கருப்புக் கொழுந்து கவர்ந்து என முடிக்கின், இன்னோசைத் தாய் வெறுத்திசையின்றா மென்பது. "நிலமிசை நீடுவாழ் வார்” (குறள். 3) இதனுள், வாழ்வார் என்னும் மொழியை வகுத்து, வாரென நேரசைச் சீராக்கி வகுப்பவே அசையினை இசையொடு சேர்த்திற்றாம். இனி, நீடுகொடி என்பதனை மாவருவாய் என்று அசையுஞ்சீரும் இசையிற்சேர்த்துக வென்பாருமுளர்.2 இவற்றைப் பிறநூலார் வகையுளியென்ப: இச்சூத்திரத்துள், 'வகுத்தன. ருணர்த்தல்' என்றமையின். இனி, வெண்பாவினுள் வெண்சீரொன்றி வந்தவழியும் வேற். றுத்தளை விரவும் இடனுடைய; அவையும் இசையொடு சேர்த்தி வேறுபாடுணர்த்துக. “மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய்” என்பது, பன்னிரண்டெழுத்தடி: 1. செய்யுட்குரிய உறுப்புக்களுள் ஒன்றாக மேலே குறிக்கப்பட்ட மாத்திரை யென்னும் அளவினால் அசை சீர் என்பவற்றின் ஒசையை அளந்து வகைப்படுத்துச் செய்யுட்குரிய இனியவோசை இவையெனவும் செய்யுட்கு ஒவ்வாத இன்னாவோசை யிவை யெனவும் செவிகருவியாகவகைப்படுத்துணர்த்துக என்பது கருத்து. இவ்வாறு மாத்திரையால் அளந்துணர்த்துதல் என்பது முற்கூறிய எழுத்தியல் வகைக்கும் ஏற்புடையதே என்பதாம். 2. நீடுகொடி என்பதனை நீ- டுகொ-டி எனச் சேர்த்து மாவருவாய்' என வெண்பாவுரிச்சீராக இசையொடு புணர்த்துரைப்பர் உரியசை கொள்ளாத பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்கள். 3. பி. நூலா' என்பது, யாப்பகுங்கல முதலிய பிற்கால யாப்பிலக்கண ஆசிரியர்களை .