பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் யொடு சேர்த்தி வகுத்துணர்த்துக. இன்னோரன்ன பிறவும் பெரிதும் எஃகுசெவியும் நுண்ணுணர்வும் உடையார்க்கன்றி உணரலாகா.1 “ஞாயிறு புவிவருவாய் புலிவருவாய் மாசேர்வாய்” என்றக்கால், ஞாயிறு புலிவருவா யென இயற்சீரின் பின்னர் நிரையசை வந்து, "சீரியை மருங்கி னோரசை யொப்பின் ஆசிரியத் தளையென் றறியல் வேண்டும்’ (தொல்-செய். 56) என்பதனான், ஆசிரியத்தளையாயினும் அஃது ஆண்டுக் கலித் தளைப்பாற் படுமென்பது, "அசையுஞ் சீரு மிகையொடு சேர்த்தி'

  • *

داد: என்பதனான் உணரப்படும். இனி, “ஞாயிறு புலிசேர்வாய் புலிசேர்வாய் மாசேர்வாய்” என்புழிப், புலிசேர்வாய் மாசேர்வாயென நேரொன்றிய தேனும் அது கலித்தளையென்பது, “அசையுஞ் சீரு மிகையொடு சேர்த்தி' என்பதனான் உணரப்படும். இன்னோரன்ன பலவுமுள; அவை யெல்லாம் வரையறுத்து இலக்கணங் கூறப்படா; அவற்றை அவ்வாறு வேறுபடுத்துணர்த்துதல் அவ்வத் துறைபோயினார் கடனென அடங்கக் கூறல்வேண்டி, 'அசையுஞ் சீரு மிசையொடு சேர்த்தி வகுத்தன. ருணர்த்தலும் வல்லோ ராறே” என்றானென்பது. 1. வெண்பாவினுள் வெண்சீர் ஒன்றி வந்த நிலையிலும் வேற்றுத்தளைவந்து கலக்கும் இட ண்டு. வெண்பாவிற்கு ஒதிய பத்தெழுத்து முதல் பதினான்கெழுத் தளவும் அமைந்த அளவடியுசெப்ட லொசை பிறக்கும். பதினான்கெழுத்தினைக் கடந்து பதினைந் தெழுந்து, பதினாறெழுத்து, பதினேழழுத்து அமைந்த, மூன்றடிகளும் வெண்சீர் வந்து காய்முன்நேராய் ஒன்றியக்காலும் இயற்சீர்வந்து மாமுன்நி ையும் விளமுன் நேரும் என ஒன்றாக்காலும் எக்காலத்தும் செப்டலோசை பிறவா. இங்ஙனம் வருவனவற்றை அசையும் சீரும் இசையொடு சேர்த் வேறுபடுத்து வகுத்துணர்த்துதல் எஃகு செவியும் துண்ணுணர்வும் வாய்ந்த நல்லிசைப் புலவர்கடனென்ட் தாம்.