பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 99 எ2. படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேரும் தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய இளம்பூரணம் : (இ-ள்) படை-கருவி, படை முதலான ஒன்பதும் செங் கோலும் பிறவுமென்றதனான் ஆரமுங் கழலு மெல்லாம் அரசர்க் குரிய என்றவாறு. GE I Ffrastrftu sud : இது, முறையானே அரசர்ச்குரியன கூறுகின்றது. (இ-ஸ்) கொடிப்படையுங் கொடியுங் குடையும் முரசுங் குதிரையும் யானையுந் தேருந் தாரும் முடியும் பொருந்துவன பிறவும் அரசர்க்குரிய (எ-று). 'பிறவும் என்றதனாற் கவரியும் அரியணையும் அரண் முதலாயினவுங் கொள்க; தெரிவுகொள் செங்கோல் அரசரென்ற தனானே செங்கோல் கொளப்பட்டது.1 'தாரெனவே போர்ப்பூவுந்தார்ப்பூவும் அடங்கின2 படை யென்புழி நடை நவில் புரவியுங்3 களிறுந் தேரும் அடங்காவோ வெனின் - அடங்கும். அவைநோக்கிக் கூறினானல்லன்; அவை படை-வேல், வாள் முதலிய படைக்கருவிகள். 1. தெரிவுகொள் செங்கோல் அரசர் என உடம்பொடுபுணர்த்து ஒதினமையால் அரசர்க்குச் செங்கோலுண்மை கூறப்பட்டது. 2. தார்-மாலை. போர்ப்பூ-போரின் கண் சூடப்படும் வஞ்சி, வாகை முதலிய பூக்கள். தார்ப்பூ--அவ்வவ்வேந்தர்குடியினைக் குறிக்கும் பனம்பூ, வேப்பம்பூ, ஆத்திப்பூ முதலிய அடையாளப் பூக்கள். - - 3. அரசர்க்குரிய குதிரைகன் அவ்வவ் வேந்தர்க்குரிய பட்டஞ் சாத்திக் கூறப்படுதல் உண்டு என்பார் நடை நவில் புரவி எனச் சிறப்பித்துக் கூறினார். பாண்டியனுக்குரிய குதிரை கோரம்’ எனவும் சோழனுக்குரிய குதிரை கனவட்டம்’ எனவும் பிற்காலத்திறபேசப்படுதல் இம்மரபினை அடியொற்றி யதாகும்.