பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் # 05 இப்பொருண்மையும் அரசர்க்கும் உரித்து அந்தணர்க்கும் உரித்து என்றவாறு' என இளம்பூரணருரையில் அமைந்த உரைத் தொடர் பொருட் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. இதன்கண் உரித்தன்று என்பது உரியது என்ற பொருளைத் தாராமையானும், பரிசில்கடாநிலையும் பரிசில் விடையும்போல் வன கூறியும் கைக்கிளைப் பொருள் கூறியும் கொடைத்தொழில் கூறியும். அவற்றுக்கேற்ப எடுத்தோதிய பெயர் கூறியும் அந்த னரைத் தன்மை வகையாற் செய்யுள் செய்யப்பெறா என்பது கருத்து’’ எனப் பேராசிரியர் கருத்துரை வரைந்துள்ளமையாலும் இச்சூத்திரத்திற்கு இளம்பூரண குரையிற் காணப்படும் உரைத் தொடர் இதன் முன்னுள்ள சூத்திரத்தினைச் சார்ந்ததாதல் கூடும் எனக் கருதவேண்டியுளது. - (5T 3-) எ ஊரும் பெயரும் உடைத்தொழிற் கருவி யும் யாரும் சார்த்தி அவையவை பெறுமே. இளம்பூரணம் : (இ-ன்) நகரும் தமது இயற்பெயரும் சிறப்புப்பெயரும் தத்தந் தொழிற்கேற்ற கருவியும் எல்லாரையுஞ் சார்த்தி அவை யவை வருதல் பெறும் என்றவாறு, பேராசிரியம் : இது, மேற்கூறிய அந்தணர்க்கும் அரசர்க்கும் உரியன வற்றொடு ஒழிந்த சாதியோர்க்கும் ஒப்பன உடன் கூறுகின்றது. (இ-ள்) நான்கு சாதியாரும் பிறந்த ஊரும், அவர்தம் பெயரும், அவர் சாதிக்கு உரித்தென்றற்கேற்ற கருவியும், யாருஞ் சார்த்தப்பட்டு அவை பெறுப (எ-று). இம்மூன்றும் வரையறுத்துச் சொல்லப்படா, எல்லாச் சாதியார்க்கும் ஒப்பச்செல்லுமென்பது கருத்து;2 எற்றுக்கு? இவை உடைத்தொழிற் கருவிஎன்பன மக்கட் பிரிவினர் தத்தமக்குரிய தொழிலிற்கேற்ப கைக்கொள்ளும் கருவிகள். அவையாவன. புத்தகம், செங்கோல், தராசு, கலப்பை முதலியன. 2. ஊர், பெயர், தத்தம் தொழிலுக்குரிய கருவி ஆகிய இவை சாதிபற்றி வேறுபடாப் பொருள்களாகவின் எல்லாச்சாதி யார்க்கும் ஒப்பச் சொல்லப்படும் என்பதாம், 1