பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 1 07 r எனவே, இறப்பவுயர்தல் இறப்பவிழிதல் ஆகாதென்ற வாறாம். பேராசிரியம் : இதுவும் அது. (இ-ள்) அந்நான்கு சாதியார் தலைமைக்குணம்படச் சொல்லுஞ் சொல்லும் அவரவர்க்குரிய நிலைமைக்கேற்ப நிகழ்த்த வும் படும் (எ-று). அந்தணர் தலைமைக்குணங் கூறுங்காற் பிரமனோடு கூறி யும், அரசரை மாயனோடு கூறியும், வணிகரை நிதியின் கிழவ னோடு கூறியும், வேளாண்மாந்தரை வருேைனாடு கூறியுத் தலைமைக் குணச்சொல் நிகழ்த்தப்படும் . அலையெல்லாம் அவ ரவர் செய்யுளுட் கண்டு கொள்க. ஆய்வுரை : இதுவும் அது (இ-ள்) அவரவர்க்குரிய தலைமைப் பண்புகளைக் குறிக்கும் (நெடுந்தகை, செம்மல் முதலாக) உயர்த்துக் கூறப்படும் சொற் களும் அவரவர்கள் பெற்றுள்ள சிறப்பு நிலைகட்கு ஏற்றவாறு நிகழ்த்துவர் (புலவர்) என்று கூறுவர் ஆசிரியர் எ-று. எனவே உலகியலில் ஒருவர் பெற்றுள்ள சிறப்பு நிலைகட்கு மேல் அவரை அளவுகடந்து உயர்த்துக் கூறுதலும், ஒருவருடைய குற்றங்களைக் கூறுங்கால் அவரை வரம்பு கடந்து இழித்துக் கூறுதலும் பொருத்தமுடையன ஆகா என்பதாம். 'பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை யிகழ்தல் அதனினு மிலமே (புறநானூறு) எனவரும் கணியன் பூங்குன்றனார் வாய்மொழி இங்கு உளங் கொளத் தகுவதாகும். (gTSn) 1. அந்தணரைப் பிரமனோடு ஒப்பிட்டும் அரசரைத் திருமா லுடன் ஒப்பிட்டும் வணிகரை நிதியின் கிழவனோடு ஒப் பிட்டும் வேளாண்மாந்தரை வருணனொடு ஒப்பிட்டும் அவ ரவர் தம் நிலைமைக்கேற்பத் தலைமைக் குணச்சொல் நிகழ்த்தப்படும் என்பதாம்.