பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தொல்காப்பியம் எ.எ. இடையிரு வகையோர் அல்லது நாடிற் படை வகை பெறாஅர் என்மனார் புலவர். இளம்பூரணம் : (இ-ள்) அரசரும் வணிகரும் அல்லாதோர்க்குப் படைக்கல வகை கூறப்பெறார் என்றவாறு. பேராசிரியம் : மேல் நான்கு வருணத்தாரையும் உடன் கூறிவந்தான், இது முதலும் கடையும் ஒழித்து இடைநின்ற இருவருணத்தார்க்கும் ஆவதோர் புறனடை கூறுகின்றது. (இ-ள்) அரசரும் வணிகருமல்ல துபடைப்பகுதி பெறார்.2 (எ-று). படைப்பகுதியென்பன: வேலும் வாளும் வில்லும் முதலா யின. நாடி’னென்பதனான், ஒருசார் அந்தணரும் படைக்குரியா ரென்பது கொள்க. அவர் இயமதங்கியாருந் துரோணனும் கிருடனும் முதலாயினாரெனக் கொள்க. வேளாண்மாந்தர்க்கும் 1. இடையிரு வகையோர் என்றது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனக் கூறப்படும் நால்வகைப் பிரிவினருள் நடுவில் வைத்து எண்ணப்படும் அரசரையும் வணிகரையும். இங்குக் குறித்த நால்வருணப் பகுப்பு ஆசிரியர் தொல்காப்பிய னார் காலத்தும் அவர்க்குப்பின் கடைச்சங்க காலத்தும் இல் லாமையால், நால்வருணப் பாகுபாடு பற்றிய இச்சூத்திரங்கள் தொல்காப்பிய மரபியலில் பிற்காலத்திற் சேர்க்கப்பட்டன எனக் கருத வேண்டியுள்ளது. அன்றியும் இச்சூத்திரம் வேந்து விடுதொழிற் படையும் கண்ணியும் வேளாண் மாந்தர்க்கு விதிக்கும் இவ்வியல் அஉ-ஆம் சூத்திரத்தோடு மாறுபட் டுள்ள மையும் குறிக்கத்தகுவதாகும். 2. இடையிருவகையோர் என்றது, நால்வகை வருணத்தாருள் நடுவேவைத்து எண்ணப்படும் அரசரையும் வணிகரையும் இவ் விருவகையோால்லது படைக்கலம் தாங்கிப் போர் செய்யப் பெறார் என்னும் இவ்விதி தமிழியல் வழக்கிற்கு ஏற்புடைய தன்று. வேளாண்மாந்தர் படைவகை பெறுதல் இலக்கிய வழக்கிலும் உலகியல் வழக்கிலும் காணப்படும் வாழ்விய லுண்மையாகும்.