பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் i. i. 9 பேராசிரியம் : இஃது, எய்திய திகந்துபடாமைக் காத்தது. (இ-ள்) மன்னவர் போலுஞ் செல்வத்தாராகிய இழிகுலத்தோர் நாடாண்டாராயினும் அவர்க்கு இவை கூறலமையாது (எ-று). மன்பெறு மரபி னேனோர்’ (தொல்-மர 83) எனவே, அரசர் வைசியரன்றிக் கீழ் அமையாவாயிற்று. இஃது, எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) மன்னரையொத்த சிறப்புடையராய் நாடாளும் ஆற்றல் படைத்தோராயினும், செங்கோன்மையாகிய நீதிநெறியி னின்றும் வழுவித் தாழ்ந்தோர்க்கு மேற்குறித்த சிறப்புக்கள் உள வாகப் புலவர் பெருமக்களாற் போற்றப் பெறுதல் இல்லை எறு. நன்னன் மருக னன்றியும் நீயும் முயங்கற் கொத்தனை மன்னே வயங்குமொழிப் பாடுநர்க் கடைத்த கதவின் ஆடுமழை அணங்குசா லடுக்கம் பொழியுதும் மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே (புறநா:151) எனப் பெண் கொலைபுரிந்த நன்னன் மரபினனாகிய இளவிச்சிக் கோவைப் பெருந்தலைச் சாத்தனார் அன்புடன் தழுவிக் கொள் ளாமைக்குக் காரணம் கூறுவதாக அமைந்தபாடல் இங்குக்கருதத் தகுவதாகும். (அடு) அசு. புறக்கா ழனவே புல்லெனப் படுமே. இளம்பூரணம் : (இ-ள்) ஒரறிவுடையன புறவயிர்ப்புடையனவற்றைப் புல் என்று சொல்லுவர் என்றவாறு. 1. மன்பெறுமரபின் ஏனோர் என்றது, வேந்தர்களாற் சிறப்புச் செய்யப்பெற்ற வேளிரையாதலானும், வந்தர்க்கு மகட் கொடைக் குரியோர் வேளாளர் என்பது தமிழக வரலாற்றால் நண்டு புலனாகும். ஆதலானும் 'மன்பெறுமரபின் ஏனோர்' எனவே, அரசர் வைசியரன்றிக் கீழ் அமையாவாயிற்று என வரும் உரைத்தொடர் தமிழர் வரலாற்றுக்கு ஒத்ததாகத் தோன்றவில்லை. புறவயிர்ப்புடையன.-புறத்தே வயிரம் (திண்ணிய பட்டை) $2.875). His of . 2.