பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i #8 தொல்காப்பியம் பேராசிரியம் : இது, முடியுடை வேந்தரல்லாக் குறுநில மன்னர்க்குரியன கூறுகின்றது. (இ-ள்) இவ்வெண்ணப்பட்டனவெல்லாங் குறுநிலமன்னர்க் கும் உரியன (எ-று). "மன்பெறு மரபின் ஏனோ ரெனப்படுவார் அரசுபெறு பிற்மர குறுநிலமன்னர் எனக் கொள்க அவை பெரும்பாணாற் 1 றுள்ளும் பிறவற்றுள்ளுங் காணப்படும். ஆய்வுரை : இது, மன்பெறு மரபின் ஏனோரெனப்படும் குறுநில மன்னர்க்கு உரியன கூறுகின்றது. (இ-ன்) வில், வேல், வீரக்கழல், போர்ப்பூவாகிய முடிக் கண்ணி, அடையாளப்பூ, மாலை, தேர், (யானை, குதிரை ஆகிய) ஊர்தி என எண்ணப்பட்டனவெல்லாம் முடிவேந்தராற் சிறப் பிக்கப்பெறும் குறுநில மன்னர்க்கு உரியனவாம் எபறு. இங்கு மூவேந்தர்க்குரிய முடியொன்றும் குறுநில மன்னர்க்குக் கூறப்படாமை கருதற்குரியதாகும். (அச) அடு. அன்ன ராயினும் இழிந்தோர்க் கில்லை. இளம்பூரணம் : (இ-ன்) அன்னர்தா மிழிந்தோராயினும் மேற்சொல்லப் பட்ட மன்னனால் வில்லு முதலாயின பெற்ற மரபினராயினும், நான்கு குலத்திலும் இழிந்த மாந்தர்க்கு அவை உளவாகக் கூறப் படா வென்றவாறு. எனவே, அவரவர் க் குரியவாற்றால் கூறப் பெறு மென்றவாறு. 1. பெரும்பாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவனாகிய தொண்டைமான் இளந்திரையன், சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவனாகிய ஒய்மானாட்டு நல்லியக்கோடன், மலைபடுகடாத்துப் பாட்டுடைத் தலைவனாகிய செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் முதலியோர் முடியுடை வேந்தரால் அரசு பெறும் மரபினராகிய குறுநில மன்னர் என்பது பேராசிரியர் கருத்தாகும்.