பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓝露翰 தொல்காப்பியம் அவையாவன: தெங்கு, பனை, கமுகு, மூங்கில் முதலாயின. அன. அகக்கா ழனவே மரமெனப் படுமே. இளம்பூானம் f (இ-ள்) உள்வார்ப்2 புடையனவற்றை மரமெனப்படு மென்றவாறு. பேராசிரிகம் : இது மக்களை வழங்குமாற்றுக்கண் மரபுகூறி இனி ஒரறிவுயிர்க்கு இன்னவாறு சொல்லுதன் மரபென்ப துணர்த்துதல் நுதலிற்று. (இ-ன்) புறத்துக் காழ்ப்புடையனவற்றைப் புல்லெனவும் அகத்துக்காழ்ப்புடையனவற்றை மரமெனவுஞ் சொல்லுப (எ-று). புறக்காழன வெனவே அல்வழி வெளிறென்பதறியப்படும். அவை பனையுந் தெங்குங் கமுகும் முதலாயின புல்லெனப்படும். இருப்பையும் புளியும் ஆச்சாவும் முதலாயின மரமெனப்படும்; இங்ங்னம் வரையறைகூறிப் பயந்ததென்னை? புறத்தும் அகத் துங் கொடி முதலாயின காழ்ப்பின்றியும் அகின்மரன் போல் வன இடையிடை பொய்பட்டும்3 புல்லும் மரனும் வருவன உளவாலெனின்,-இரண்டிடத்தும் ஏகாரம் பிரித்துக் கூறினமை யானும் எனமொழிப' என்று இருவழியுஞ் சிறப்பித்து விதந்தமை யானுஞ் சிறுபான்மை அவையும் புல்லும் மரனுமென அடங்கு மென்பது. 'இரும்பனம் புல்லின் பசுந்தோட்டுக் குடம்பை' எனவும், . யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவின்' (குறுந் : 198) எனவும் வரும். 1. இவ்விரு சூத்திரங்களையும் ஒரு குத்திரமாகக் கொண்டார் பேராசிரியர். புல்லென மொழிப மரமெனமைாழிப’ என் பன பேராசிரியர் கொண்ட பாடங்கள். 2. அகவயிர்ப்புடையன-உள்ளே வயிரம் (திண்மை) உடையன. 3. பொய்படுதல்-பொத்துப்படுதல்; பொந்துடையதாய்ப் புரை படுதல்.