பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 盘艺篮 நிலாவி னிலங்கு மணன்மலி மறுகிற் புலாலஞ் சேரிப் புல்வேய் குரம்பை' (அகம் : 200) எனப் புறக்காழும் அகக்காழும் அல்லன புல்லெனப் பட்டன வென்பது. அது பனையோலையுமாகவிற் புறக்காழுடைய பனையுமாமென்பது. உதிமரக் கிளவியுமாமென்பது சிறு பான்மை பிறவும் அன்ன. ஆய்வுரை இஃது, ஒரறிவுயிர்களாகிய தாவரங்களுக்குரிய மரபுப்பெயர் கூறுகின்றது. (இ-ள்) உள்ளே வயிரமின்றிப் புறத்தே வயிரம் வாய்ந்தன வற்றைப் புல்” என வழங்குவர் எ-று. புல் என்ற வகையைச் சார்ந்தன தெங்கு, பனை, கமுகு, மூங்கில் முதலியன காழ்-வயிரம்; திண்ணிதாந் தன்மை. 'தாலப் புல்லின் வால்வெண் தோட்டு’ (சிலப்-16 :) 'புறக்காழனவே புல்லென மொழிப’ (மரபியல்-அசு) என்றாராகலின் (தாலத்தை-பனையைப்) புல் என்றார்’ என்பர் அடியார்க்கு நல்லார். - (அசு) இதுவும் அது. . (இ-ள்) அகத்தே வயிரமுடைய தாவரத்தை மரம் என்று வழங்குவர் எ-று. மரன்-மரம்; னகரமகரப் போலி. மரம் எனப்படுவன விள, பலா முதலியன. புறத்தும் அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பு (வயிரம்) இன்றியும், அகில்மரம் போல்வன இடையிடை பொய் பட்டும் (பொந்துடையனவாகியும்) வரினும், சிறுபான்மை அவை யும் புல்லும் மரனும் என அடங்கும்' என்றார் பேராசிரியர். (அஎ) 1. உதி என்பது புறத்தும் அகத்தும் திண்மையற்றதாயினும் சிறு பான்மை மரமென்னும் இனத்திற் சேர்த்துரைக்கப்படுவ தாயிற்று. உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே (தொல் - எழுத்ததிகாரம்) என்றார் தொல்காப்பியனாரும்.