பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮签憩 தொல்காப்பியம் ஆய்வுரை : இஃது உலக வழக்கில் மரபுச் சொற்களைத் திரிபின்றி வழங்கு தலின் இன்றியமையாமையை வற்புறுத்துகின்றது. (இ-ள்) நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் என்னும் ஐம்பெரும் பூதங்களும் தனித்தனியே கலந்தும் ஒன்றாக பயங்கியும் கூடிய திரட்சி உலகமாதலின் மேற்கூறப்பட்ட பொருள்களை உயர் திணை அஃறிணையென்னும் இருதினையும், ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என்னும் ஐந்துபால்களும் வழுவாமல் அவை திரிபுபடாத மரபுச் சொற்களால் இணைத்து வழங்குதல் வேண்டும். (எறு) உலகம் என்ற சொல் உலகத் திரட்சியாகிய புறஅமைப் பினையும் உலகினுள்ளே பிரிக்கவொண்ணாது ஒன்றாய் மயங்கிக் கிடக்கும் உட்பொருள்களையும் உணர்த்துமெனவும், அவ்விரு வகைப் பொருள்களையும் ஒருங்குடையதாதல் பற்றிக் கலந்த மயக்கம் உலகம், என்றார் எனவும், கலத்தல் என்றது முத்தும் பவளமும், நீலமும், மாணிக்கமும் விரவினாற் போன்று தனித் தனியே விரவுதல் எனவும், மயக்கம் என்றது பொன்னும் வெள்ளி யும் செம்பும் உருக்கியொன்றாதல் போன்று ஒன்றாகக் கலத்தல் எனவும் விளக்கம் கூறுவர் இளம்பூரணர் உலகம் என்பது ஐம் பெரும் பூதங்களின் தீரட்சியாயினும் உயர்திணை முப்பால் வாய்பாடுகள் வேறாகவும் அஃறிணை இருபால் வாய்பாடுகள் வேறாகவும் இயலும் நெறிமுறைமைக்குக் காரணம் பண்டையோர் வகுத்து வழங்கிய சொல் மரபல்லது பிறிதில்லையெனவும் வற்புறுத்துவது இச்சூத்திரமாகும். (க.க) கூஉ. மரபுநிலை திரித செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி னான. இளம்பூரணம்: என்னுதலிற்றோ-எனின் செய்யுட் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்). ஈண்டுச் சொல்லப்பட்ட மரபுநிலையிற் றிரிதல் செய்யுட்கில்லை; மரபு வழிப்பட்ட சொல்லினாற் செய்யவேண்டு தலின் என்றவாறு. 1. இச்சூத்திரம் மரபுநிலை திரியாச் சொற்களால் செய் யுட்கள் இயற்றப்படுதல் வேண்டும் என்கின்றது.