பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் # 3 i எனவே, யாதானும் ஒரு செய்யுளும் ஈண்டோதிய மரபினாற் செய்யவேண்டும் என்றவாறாம். செய்யுட்கில்லை எனவே,வழக்கினுட் சில திரியவும் பெறும். அவை வழக்கினுள் ஆணினைப் போத்தென்றல் போல்வன. பேராசிரியம்: இது, மரபினையே வற்புறீஇயது. (இ~ள்) வழக்கினகத்து வரலாற்றுமுறைமை பிறழாது வருதலே தக்கது, மற்றுச் செய்யுள்செய்த சான்றோர் அதற்கேற்ற வகையாற் செய்யப்பெறுவராகலின் (எ-று). அவர்க்கு இம்மரபு வேண்டுவதன்றுகொலென்று கருதினுங் கருதற்க. ' மரபே தானு, நாற்சொல் வியலான் யாப்புவழிப் பட்டன” (தொல் செய்; 80) என்றதனான், மரபுவழிப்படுங்காலென்பான்,

  • மரபு வழிப்பட்ட சொல்லி னான'

என்றானென்பது ஆண்டுக் கூறிய மரபு உலகியலாகலான் அல் வுலகியல் அவ்வாறாதற்குக் காரணம் ஈண்டுக் கூறிச் செய்யுட்கும் அதுவே காரணமெனக் கூறினானென்பது. இதனது பயன்:செஞ் ஞாயிறென்பது வழக்கன்றாயினும் உண்மைநோக்கி அதனைச் செய்யுள் செய்யுஞ் சான்றோர் (புறம்-38) அவ்வாறு வழங்கினாற் போல உயர்திணைப் பொருளையும் ஐம்பெரும்பூதங்கள் அஃ றிணையான் வழங்குதலுண்மை நோக்கி அவ்வாறுஞ் சொல்லப் பெறுபகொலென்று ஐயுற்றானை ஐயம் அறுத்தவாறு அஃறிணைப் பாற்கும் இஃதொக்கும்; அல்லது உம் இன்ன செய்யுட்கு இன்ன 1. செய்யுளியல் அ0 - ஆம் சூத்திரத்திற் சுட்டப்பட்ட மரபு என்பது உலகியலில் பெயர்,வினை, இடை, உரி என்னும் நால் வகைச் சொற்களால் வழங்கப்படும் உலகியல் மரபாகும். அதனையே செய்யுட்குரிய மரபாகக்கூறிய ஆசிரியர், உலகியல் மரபு அவ்வாறாதற் காரணம் மரபுவழிப்பட்ட சொல்லி னான என்ற தொடரால் இங்குக் கூறினார். எனவே செய்யுட்கும் இம்மரபே காரணம் என்பதனையும் உடன் கூறினாராயிற்று.