பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தொல்காப்பியம் உலகியலொழுக லாற்றிற்கும் அரண்செய்து வாழ்வோராகிய புலத்துறை முற்றிய சான்றோர்களை. "எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர் செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே' (நன்னூல் - பொதுவியல் - 37) எனப் பவணந்தி முனிவர் கூறும் மரபிலக்கணம் இம்மரபியற் சூத்திரப் பொருளை விரித்துரைத்தல் காணலாம். உலக வழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழஇ கிலும் நெடுங்காலமாகப் பயின்று வழங்கும் மரபுச் சொற்கள், இருதிணையும் ஐம்பாலும் ஆகிய பொருள்களின் இளமை, ஆண்மை, பெண்மை முதலிய இயல்புகளைக் குற்றமறப் புலப் படுத்தும் முறையில் அமைந்தன எனவும், இச்சொற்களின் பொருள்நிலை மாறுபடாமல் உயர்ந்தோர் வழக்கினை அடி யொற்றி உலகவழக்கும் செய்யுள் வழக்கும் ஆகிய இருவகை வழக்குகளையும் போற்றிக் காத்தல் மொழி வளர்ச்சிக்கு அரண் செய்வதாம் எனவும் இம்மரபியற் சூத்திரங்களால் ஆசிரியர் விளக்கியதிறம் தமிழ் வளர்ச்சியிற் கருத்துடையோர் அனைவரும் உணர்ந்து போற்றத் தகுவதாகும். (&母) கடு. 'மரபுநிலை திரியா மாட்சிய வாகி உரையடு நூல்தாம் இருவகை நிலைய முதலும் வழியுமென நுதலிய நெறியின இளம்பூரணம் : என்னுதலிற்றோ-எனின் மேற் செய்யுளியலுள் தோற்று வாய் செய்த நூலை இலக்கண வகையான் உணர்த்துதல் நுதலிற்று. (இ-ஸ்) மரபாவது நூற்கு இன்றியமையாத இயல்பு. அவ்வியல்பு திரியாத மரபுடைத்தாகி உரைக்கப்படும் நூல்தாம் இருவகைய, முதனுால் எனவும் வழிநூல் எனவும் என்றவாறு. உரைக்கவென்பது விகாரத்தால் தொக்கது அது வருகின்ற சூத்திரத்தாற் கூறுப சார்புநூல் என்பதும் ஒன்றுண்டாலெனின், அஃது இருவர் ஆசிரியர் கூறியவதற்கு உடம்பட்டு வருதலின் அதுவும் வழி

  • சுடு முதல் ககo வரையுள்ள நூற்பாக்கள் நூலின் இலக்கண மரபு உணர்த்துகின்றன.