பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறபியல் 24

மரபியல் # 37

  • a

நூலென அடங்கும். எதிர் நூல் என்பதும் ஒன்று ஒரு முனைவனாற் செய்யப்படின் முதனூலாம்; பிறர் செய்யின் வழங்காது. பேராசிரியம் : இது, மேற்கூறப்பட்ட மரபு வழக்கிற்கேயன்றி இலக்கண ஞ் செய்வார்க்கும் வேண்டுமெனவும் அவ்விலக்கணம் இணைப்பகுதித் தெனவுங் கூறுகின்றது.1 தொல்-மரபியல்-95 முதல் 112 முடியவுள்ள சூத்திரங்களைப் பற்றிய அடிக்குறிப்பு நன்னூலிற் பொதுப்பாயிரமாக அமைந்த சூத்திரங்கள் பவணந்தி முனிவரால் இயற் தப்பட்டன அல்ல என்பது. நன்னூ லுரையாசிரியர்களுள் காலத்தால் முற்பட்ட மயிலை நாதர் அச்சூத்திரங்களைப் பவணந்தி முனிவர் செய்தனவாகக் கொள்ளாமல் 'மலர் தலையுலகின்' எனத் தொடங்கும் சிறப்புப் பாயிரவுரையின் முன் பழஞ் சூத்திரங்களாகத் தந்து, பின்னர்ச் சிறப்புப் பாயிரத்திற்கு உரை வரைந்துள்ளார். இங்ங்னமாகவும் பின் வந்த உரையாசிரியர்களாகிய சங்கர நமச்சிவாயப் புலவர் முதலியோர், ப்பொதுப்பாயிரச் சூத்திரங்களும் பவணந்தி முனிவரால் இயற்றப்பட்டனவே எனக் கொண்டு உரை வரைந்துள்ளனர். நூலாசிரியர் எல்லோரும் எல்லா நூலுக்குமுரிய பொதுப்பாயிர இலக் கனத்தைத் தம் நூலிற் சொல்ல வேண்டும் என்னும் இன்றி யமையாமையில்லை. ஆகவே அப்பகுதி பவணந்தி முனிவர் வாக்கென உறுதியாகக் கொள்ளுதற்கில்லை. அதுபோலவே சொற்பொருள் மரபுணர்த்தும் தொல்காப்பிய மரபியலிற் காண்ப்படும் இலக்கண நூல் மரபு பற்றிய இச்சூத்திரங்கள் பண்டைநாளில் மரபியலுரையில் எடுத்தாளப்பட்ட பழஞ் சூத்திரங்களாதல் கூடும் எனக் கருதவேண்டியுள்ளது. தொல் காப்பியம் செய்யுளியலில் நூலைப்பற்றியும் சூத்திரத்தைக் குறித்தும் தொல்காப்பியனார் கூறிய மொழி நடைக்கும் அவைபற்றி மரபியலிற் காணப்படும் மொழிநடைக்கும் வேறு பாடு மிகுதியும் உண்மை இங்கு நினைத்தற்குரியதாகும். மரபுநிலை திரித்துச் சொல்லுவராயின் உலகத்துச் சொல் லெல்லாம் பொருளிழந்து வேறுபடும் என்பதனை மேல் இவ்வியல் கூக-ஆம் சூத்திரத்தால் இலக்கண நூலுக்கும் எய்துவித்த ஆசிரியர், அங்ங்னம் மரபுநிலை திரியாமையே நூல்கட்குத் தகுதியாமெனவும் அங்ங்ணம் இயற்றப்படும் நூல் முதனூல், வழிநூல் என இருவகைப்படுமெனவும் இச் சூத்திரத்தாற் கூறினார். இச் சூத்திர முதலாக இலக்கண நூலின் மரபு கூறப்படுகின்றது. |பக்கம் எண் 24