பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿器 தொல்காப்பிவம் என்னும் செய்தென்வாய்பாட்டு வினையெச்சம் 'மழை பெய்து நெல் விளைந்தது' என் புழிப்போன்று ஏதுப்பொருளில் வந்தது. விளங்கிய அறிவு என்றது இயல்பாகவே பாசங்களின் நீங்கின மையால் பிறர் உணர்த்த வேண்டாது தானே எல்லாப் பொருள் களையும் ஒருசேர அறியவல்ல முற்றுணர்வினை. முனைவன்முதல்வன்; என்றது உலக முதல்வனாகிய இறைவனை. காணு தல்-செய்தல், இயற்றுதல். 'முதல் துலாவது, வரம்பிலறிவன் பயந்ததாகும். என்னை?

  • வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதல்நூ லாகும்’ (தொல்-மரபியல் சுசு) எனவும், முதல் நூற்குப் பிறன் கோள் கூறாது” எனவும், " தந்திரம் சூத்திரம் விருத்தி மூன்றற்கும் முந்துநூ லில்லது முதனுா லாகும்' எனவும் சொன்னாராகலின்" (இறையனார் களவியல்-சூ-1 உரை) என இறையனார் களவியலுரையாசிரியர் இம்மரபியற் சூத்திரத் தினையும், வேறிரண்டு பழஞ் சூத்திரங்களையும் எடுத்துக்காட்டி யுள்ளமை இங்கு நோக்கத்தகுவதாகும். (கசு) கன. வழியெனப் படுவ ததன் வழித் தாகும். இளம்பூரணம் : என்னுதலிற்றோ-எனின், வழிநூலாமாறு உணர்த்து தல் துதலிற்று. (இ-ள்) வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல் வழியே செய்வது என்றவாறு.1 அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும். ausranala : இது, வழிநூலாமா றுணர்த்துகின்றது. 1. வழிநூல் என்பது முதனூற் பொருளை அடியொற்றி அதன் வழிப் பின்னர்ச் செய்ய்ப் பெறும் நூலாகும்.