பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவி கல். 47 அழிவழக்கும் இழிசினர் வழக்கும் முதலாயினவற்றுக்கெல் லாம் நூல்செய்யின் இலக்கன மெல்லாம் எல்லைப்படாது இகந்தோடு மென்பது உம், இறந்தகாலத்து நூலெல்லாம் பிறந்த வழக்குப்பற்றிக் குன்றக்கூற லென்னுங் குற்றந்தங்குமென்ப தூஉம், ஒன்றாகப் புறனடுத்து ஒரு சூத்திரமே செய்துபோக அமையின்ைறிஒழிந்த சூத்திரங்களெல்லாம் மிகையாமென்பதுTஉ மெல்லாம் படுமென்பது.1 ஆய்வுரை : இது, முதனுாலாமாறு இதுவென உணர்த்துகின்றது. (இ-ன்) வினைத்தொடர்பினின்றும் இயல்பாகவே நீங்கி விளங்கிய முழுதுணர்வுடைய முதல்வனாற் செய்யப்பட்டது முதல்நூலாகும் எ-று. வினையென்பது, வேண்டுதல் வேண்டாமை காரணமாகச் செய்யப்படும் நன்றுந் தீதுமாகிய வினைத்தொடர்பு வினையின் நீங்கி என் புழி இன்' என்னும் ஐந்தாம் வேற்றுமையுருபு நீக்கப் பொருளில் வந்தது! நீங்கி விளங்கிய அறிவின் என்புழி நீங்கி' 1. முனைவனாகிய இறைவனது அருள் வழி நின்ற முனை வனாகிய அகத்தியனாற் செய்யப்பட்ட அகத்தியமும் தமிழ் முதல்நூல் என்பதும், ஆலவாயிற் பெருமானடிகளாகிய இறையனார் அருளியல் பிற்காலத்து தாயினும் அதுவும் முதல்நூலே என்பதும், அகத்தியமே முற்காலத்து முதல் நூல் என்பதும் தொல் காப்பியம் அதன் வழிநூல் என் பதும், தொல்காப்பியர் அகத்தியத்தொடு பிறழ்வும் வழிநூல் செய்தார் என்பார் கூற்று முன்னோர் கொள்கைக்கு முரண் பட்டதாம் என்பதும், தமிழ்நூலுள்ளும் தமது மதத்துக்கு ஏற்பன முதல்நூல் உளவென்று சிலர் பிற்காலத்துச் செய்து காட்டினாராயினும் அவை முற்காலத்து இல்லாதன என்ப தும், காலந்தோறும் வேறுபடவந்த அழிவழக்கும் கீழ் மக்கள் வழக்கும் முதலாயினவற்றுக்கெல்லாம் இலக்கண நூல் செய்யின் அவற்றின் இலக்கணம் ஓர் வரம்பில் அடங் கா என்பதும் ஆகியவுண்மைகளைப் பேராசிரியர் இவ்வுரைப் பகுதியில் வலியுறுத்திக் கூறியுள்ளமை தமிழிலக்கிய வர லாற்றாசிரியர்களால் உளங்கொளத் தகுவதாகும்.