பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 50 தொல் காப்பியம் மோவெனின்,-ஈண்டுக் கூறிய பொருளெல்லாந் தழுவுமாற்றாற் செய்தார்ாயின்-அது வழி நூலாதற்கு இழுக்கென்னையென்க. இனிச், சில குன்றக்கூறினார். தொகுத்து நூல்செய்தாராகலி னென்பாரும் உளர். ஒழிபொருளவாயினது தொகையெனப் படாமையின் அங்கனங் கூறுதல் வழிநூலிலக்கணமன்றென்பது. ஆய்வுரை : இது வழி நூலாமாறு உணர்த்துகின்றது. 'இ-ன்) வழிநூல் எனப்படுவது வினையின் நீங்கி விளங்கிய அறிவினனாகிய முதல்வன் அருளிய, அம்முதல் நூலினை அடி யொற்றி இயற்றப் பெறுவதாகும் எறு. - ..இனி, அந்நூலோடு (முதல் நூலோடு) ஒத்தமரபிற்றாய், ஆசிரியமதவிகற்பம்படக் கிளப்பது வழிநூல் எனப்படும். என்னை? முன்னோர் நூலின் முடிபொருங் கொத்துப் مرمر பின்னோன் வேண்டும் விகற்பங் கூறி அழியா மரபினது வழிநூலாகும்' (இறையனார்களவியல் உரை மேற்கோள்) என்றாராகலின்' எனவிளக்குவர் இறையனார் களவியலுரை யாசிரியர். (க்ள) ஆ , வழியின் நெறியே2 நால்வகைத் தாகும். இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின் வழிநூல் பாகுபடுமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ-ன்) வழிநூல் எனப்படுவது நான்கு வகைப்படும் என்றவாறு: 1. குமரியாறு கடல் கொள்ளப்பட்ட பிற்காலத்தில் வாழ்ந்த சிறுகாக்கைபாடினியார் செய்தநூல் முழுவதும் பேராசிரியர் காலத்துக் கிடைக்கவில்லையென்பது இவ்வுரைப் பகுதியாற் புலனாகின்றது. 2. வழியின் நெறி - வழிநூல் செய்யும்முறை 3. வழிநூல் நால்வகைப்படும். எனவே, இங்குக் குறித்த நால் வகையுள் ஒன்றாய் வரினல்லது பலவகையாய் வாரா எனவும், முதனுளலாயின் இங்ங்ணம் நால்வகைப்படாது ஒன்றாகவே அமையும் எனவும் கூறியவாறாயிற்று.