பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盟然{》 தொல்காப்பியம் உரைக்கண் வருங்காற் கூற்றினாற் கொள்ளவருமெனவும் கொள்க. அஃதேற் கூற்றினாற் கோடன், "மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்” (தொல் -மர 104) என வருகின்ற சூத்திரத்திற் பெறுதுமெனின், அற்றன்று; அது பிறன்கோள் பற்றி மறுதலைக்கடாஅ மாற்றமுங் கூறு தற்குச் சொல்லினான்; இஃது அன்னதன்றி அறியாது வினாவுந் துணையே யாகலின் வேறென்பன. விடுத்தலெனவே வினாவினை விடுத்தல் பெற்றாம். விலக்கலெனவே அஃதல்லாப் போலியை விலக்குதலென்பது பெற்றாம். புரைதப நாடிப் புணர்க்கவும் படுமே காண்டிகை பிரண்டும் உரையிரண்டுமென்று வருகின்ற நான்கன் கண்ணும் இடை அந்தரமின்றிப் புணர்க்கவும்படும் அவ்விருபகுதியும் (எ-று). அஃதாவது, காண்டிகைப்பகுதி இரண்டற்கும் விடுத்தலும் விலக்கலும் உடையோர் குறிப்பினாற் கொள்ளவைத்தலும், ஒழிந்த உரையிரண்டன்கண்ணும் அவை கூற்றினாற் கொள்ள வைத்தலுமென உணர்க. உம்மை இறந்தது தழிஇயிற்று; என்னை: காண்டிகையும் உரையும் ஒன்று ஒன்றனை ஒழித்தும் வருமென்றமையின் ஒழியாது வருதல் உடன்பட வென்றதனால் தழுவப்பட்டது. இவற்றிற்கு உதாரணமாமாறு தத்தம் விரிச் சூத்திரத்துட் சொல்லுதும். ஆய்வுரை : (இ-ள்) ; சூத்திரத்தின் முன்னர் உரையை விரித்துரைக்கு மிடத்தும் சூத்திரப் பொருளை யாவரும் குற்றமற ஏற்றுக் 1. சூத்திரப்பொருளை மட்டும் விளக்குவதும் சூத்திரப் பொரு ளுடன் உதாரணமும் காட்டி விளக்குவதும் எனக் காண்டிகை இருவகைப்படும். இவற்றின் இலக்கணத்தினை இவ்வியல் கoக, கoச-ஆம் சூத்திரங்களில் விரித்துக் கூறுவர் ஆசிரியர். பதப்பொருளைத் தொகைநிலை பயனிலை முதலியவற்றாற் படுத்து, இஃது இன்ன வேற்றுமைத் தொடர்’ என்றாற் போல சொற்பொருளை விரித்துக்கூறும் முறையில் அமைந்தது உரையெனப்படும். இதனை இக்காலத்தார் விரிவுரையெனவும் விருத்தியெனவும் வழங்குவர். இவ்வுரையும் இருவகைப்படும் என்பதனை இவ்வியல் கoரு, கoசு-ஆம் சூத்திரவுரைகளில் விளக்குவர் பேராசிரியர்.