பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தொல்காப்பியம் புடையன நூலிற் கூறப்படும் இலக்கணங்கள் எனவும், சூத்திரம் காண்டிகை. உரை என மூன்றும் அவற்றோடு குற்றமின்மையும், உத்திவகையும் சேர்க்க நூலின் இலக்கணம் ஐந்தாம் எனவும் விளக்குவர் பேராசிரியர். "என்பது பாயிரம், என்னுதவிற்றோவெனின் என்பது உம் ஆக்கியோன் பெயர் முதலிய எட்டும் உண்ர்த்துதல் நுதலிற்று என்பது உம், பாயிரங்கேட்டலாற் பயன் இதுவென்பது உம், இப்பாயிரஞ்செய்தார் இவர் என்பது உம் போல்வன பாயிரத் துக்குப்பாயிரம் எனக்கொள்க. இவையெல்லாம் ஒத்த சூத்திரம் உரைப்பின்’ (தொல்-மரபியல் : கoo) என்புழி ஒத்த என்பதனாற் கொள்ளப்படும்' (தோல்காப்பியப் பாயிரவிருத்தி) எனச் சிவ ஞான முனிவர்தரும் விளக்கம் இச்சூத்திரத்திற்குப் பேராசிரியர் தந்த விளக்கத்தினை அடியொற்றியமைந்ததாகும். (கoo) கoக. உரையெடுத் ததன்முன் யாப்பினுஞ் சூத்திரம் புரைதட உடன்படக் காண்டிகை புணர்ப்பினும் விதித்தலும் விலக்கலும் எனவிரு வகையொடு புணர்ந்தவை நாடிப் புணர்க்கவும் பெறுமே, இளம்பூரணம் : இதுவுமது. (இ-ஸ்) சூத்திரத்தின் முன்னர் உரையை விரித்துரைக்கு மிடத்துஞ் சூத்திரப் பொருள் விளங்கக் காண்டிகை புணர்க்கு மிடத்தும் ஆசிரியன் இப்பொருள் இவ்வாறு கூறல்வேண்டுமென விதித்தலும், இப்பொருள் இவ்வாறு கூறப்பெறானென விலக்கலு மாகிய இருவகையோடே கூடப் பொருந்தினவவை ஆராய்ந்து புனர்க்கவும் ஆம் என்றவாறு. இதனாற் சொல்லியது ஆசிரியன் சொன்ன சூத்திரத்தினைக் குறைபடக் கூறினானென்றல் அமையாமையானும், அவன் கூறு கின்ற பொருளினை நிலைபெறுத்தற்குப் பிறிதொன்றை விரித் தாதிய நெறியை விலக்கியும் பொருள் உரைத்துக்கொள்ளப்படு மென்றவாறு. செய்யுளியலுள்,