பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iரபியல் 霞怒勤 கொள்ளும் முறையில் சூத்திரப்பொருள் விளங்கக் காண்டிகை யுரையினை இயைத்துரைக்குமிடத்தும் இப்பொருளை இவ்வாறு கூறவேண்டுமென விதித்தலும், இவ்வாறு கூறலாகாது என விலக்குதலும் ஆகிய இரு - த்துப் பொருத்துவன ஆராய்ந்து கூட்டியுரைக்கப் பெறுதலும் நூலின் இலக்கணமாம் எ-று. - " நூலெனப் படுவது நுதலிய பொருளை ت: يم . چ. . ؛ - جسم வகையோடு ஆன்:ள் ஆதிக் கண்ணே அறியச் சுட்டி ஒத்துமுறை நிறுத்துச் சூத்திரம் நிரை இ முதல்வழி சார்பென மூவகை மரபின் தொகைவகை விரியின் வசையறத் தெரிந்து ஞாபகம் செம்பொருள் ஆயிருவகையின் பாவமைத் தொழுகும் பண்பிற் றாகிப் புணர்ச்சியின் அமைந்து பொருளகத் தடக்கித் தனக்குவரம் பாகித் தான் முடி வதுவே, எனவும் சொன்னாராகலின். அன்றியும், நூலெனப் படுவது துதலிய பொருளை முதலிற்கூறி, முதல் நடு இறுதி மாறுகோள் இன்றித், தொகைவகை விரியிற் பொருள்வைத்துப் பொழிப்பு, அகலம், நுட்பம், நூலெச்சம் என்னும் உரையில் பொருள் விளங்கும் நுண்மை வரம்பாக நோக்குடையது; என்னை?

  • நூலெனப் படுவது நுவலுங் காலை

துதலிய பொருளை முதலிற்கூறி முதல்நடு விறுதி மாறுகோ ளின்றித் தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி உண்ணின் றமைந்த உரையொடு பொருந்தி நுண்ணிதின் விளக்க லதுவதன் பண்பே' என்றாராகலின்; இவ்வகை சொல்லப்பட்டது நூலென்ப" (இறையனார் களவியல் சூத்திரம்1) எனக் களவியலுரையாசிரியர் நூலின் இலக்கணத்தை விரித்துரைப்பர். அவர் இவ்வுரையில் இரண்டாவதாக எடுத்துக்காட்டிய நூற்பா தொல்காப்பியச் செய்யுளியல் கடுக. ஆம் சூத்திரத்தின் பாட வேறுபாடுடைய வேறு வடிவமாக அமைந்துள்ளமை காணலாம். இம்மரபியற் சூத்திரத்திற்குறிக்கப்பட்ட காண்டிகையென் னும் உரைக்குரிய பெயர் தமிழிலக்கண நூல்களில் மட்டுமே பயின்று வழங்குகின்றது. இச்சூத்திரத்தின் மூன்றாமடிக்கு, விடுத்