பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 16? ' ஞகாரை யொற்றிய தொழிற்பெயர் முன்னர் ” (தொல்-எழுத்து புள்ளி : 1) என்பது உம் முகலாயவற்றிற்கும் இஃது இன்றியமையாதாகலும் இதற்கு அவை இன்றியமையாவாகலும் உடைமையின், துளக்க லாகாத் துணைமையெய்தியது உமாயிற்று. இருபத்துநான் கீறும் இருபத்திரண்டு முதலும்பற்றி எழுந்த மொழிகளெல்லாம் வேற் றுமைக் கண்ணும் அல்வழிக்கண்ணும் இருமொழித்தொழிலும் ஒருவகையால் தொகுத்துக் கூறினமையின் அளக்கலாகா அரும் பொருட்டாதலும் பெற்றாம். இங்ங்ணம் வருதல் இயல்பெனவே சிறிய வேறுபட்டு வருவன உளவாயின் அவையும் அமையுமென் றானாம், அவை: " அந்தா லைந்து மூன்றுதலை யிட்ட முன்னுறக் கிளந்த வுயர்தினை யவ்வே '’ (தொல்-சொல்-வினை : 1) என்றாற்போல்வனவும் பிறவும் இலேசுச் சொல்லும் இயல் பின்றி விகாரமெனப்படும். ஆய்வுரை : இது, நூலுறுபாகிய சூத்திரம் ஆமாறு உணர்த்துகின்றது’ (இபள்) மேற்கூறப்பட்ட தொகுத்தல், விரித்தல், தொகை விரி, மொழிபெயர்ப்பு என்னும் நால்வகையினும் கூறப்பட்ட பொருளோடு, சிலவெழுத்தினால் இயன்ற யாப்பினதாய் அதன் பொருளை விரித்துரைக்குங் காலத்து அவ்வுரையிற் பொருளெல் லாந் தன்னகத்தடக்கி, நுண்ணிய பொருண்மையுடன் பொருந்திய விளக்கமுடையதாகி யாவராலும் அசைக்கவொண்ணாத (மறுக்க வொண்ணாத) துணையொடு (நூற்சான்றுகளோடு) பொருந்தி, இல் அளவினது என அளக்கவொண்ணாத அரியபொருள்களை யுடையதாகிப் பலவகையாலும் பயனை ஆய்ந்து தெளிதற்குக் கருவியாய் விளங்குவது சூத்திரத்தின் இலக்கணமாகும் என வற்புறுத்துக் கூறுவர் ஆசிரியர் எ-று. (கoஉ} கoக. பழிப்பில் சூத்திரம்ட்ட பண்பிற்ப கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும். இளம்பூரணம் : என்னுதலிற்றோ எனின். காண்டிகை யாமாறு உணர்த்துதல்நுதலிற்று