பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ł 8{$ தொல்காப்பியம் கேட்போர்க் கின்னா பாப்பிற் றாதல் பழித்த மொழியான் இழுக்கக் கூறல் தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் என்ன வகையினும் மனங்கோள் இன்மை அன்ன பிறவும் அவற்றுவிரி யாகும். இளம்பூரணம் : மேலதிகாரப்பட்ட ஈரைங் குற்றமும் ஆமாறு உணர்த்து தல் நுதலிற்று. (இ-ள்) கூறியது கூறலாவது ஒருகாற் கூறியதனைப் பின்னுங்கூறல். மாறுகொளக் கூறலாவது ஒருகாற் கூறிய பொருளோடு மாறு கொள்ளுமாறு பின் கூறல். அஃதாவது தவம் நன்று என்ற வன்றான் தவந் தீதென்று கூறல், குன்றக் கூறலாவது தானதிகரித்த பொருள்களுட் சிலவற் றைக் கூறாதொழிதல். மிகைபடக் கூறலாவது அதிகாரப் பொருளன்றிப் பிற பொருளுங் கூறுதல். அஃதாவது தமிழிலக்கணஞ் சொல்லுவா னெடுத்துக் கொண்டான் வடமொழியிலக்கணமும் கூறல். பொருளில கூறலாவது முன்னும் பின்னும் வருகின்ற பொருண்மைக் கொப்பின்றிப் பயனில்லாதன கூறல். மயங்கக் கூறலாவது கேட்டார்க்குப் பொருள் விளங்கு மாறின்றிச் கூறல். கேட்போர்க்கின்னா யாப்பிற்றாதலென்பது பொருள் யாக்கப்பட்ட சூத்திரஞ் சந்தவின்பமின்றி யிருத்தல். பழித்தமொழியான் இழுக்கக் கூறலாவது தானொரு பொருளை யொருவாய்பாட்டாற் றிரித்துப் பிறிதொரு வாய்பாட் டாற் கூறுதல். அக்குறிப்பு உலகவழக் கின்மையாற் பிறர்க்குப் புலப்படாதாம்; அதனால் அதுவுங் குற்றமாயிற்று. என்னவகையினும் மனங்கோள் இன்மையாவது எழுத்தி னாலுஞ் சொல்லினா னும் பொருளினானும் மனங்கொள்ளுமாறு கூறாமை.