பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் i B7 பேராசிரியம் : இது, நிறுத்த முறையானே ஈரைங் குற்றமும் உணர்த் து தல் நுதலிற்று. (இ-ன்) சிதைவு எனப்படுபவை வசையற நாடின் குற்ற மென்றற்குச் சிறப்புடையனவற்றைக் குற்றந்திர ஆராயின் இவற்றை எனப்படுபவென்பதென்? குற்றமாதற்குச் சிறந்தில வாம் பிறவெனின்,-இவ்வாசிரியர் எஞ்ஞான்றுங் குற்றத்திற்கு இலக்கணங் கூறாராகலான் இலக்கணத்தோடு கூறுந்துணைப் பயம்படுதலும் ஒருவாற்றாற் சிறப்பெனவே படுமென்பது; அல் லதுாஉம் ஒழிந்த செய்யுட்காயின் இவையனைத்தும் ஆகாவென் பது ஈண்டே தழாஅல் வேண்டுமாகலானுஞ் செய்யுட்காயின் அவை அமையாச் சிறப்பு உடைமையானும் இது வழக்குஞ் செய்யுளுமேயன்றி அவற்றின் வேறுபடவுஞ் செய்யப்படும் நூலி லக்கணமாகலானும் எழுவகை வழுப்போல அமைவனவே கூறாது நூலுள் வரப்பெறாதனவும் வரைத்து கூறினானென்பது அமைவனவற் றினஞ்சார்த்தி ஒழிந்தனவுங் கூறினான்; அல்லாக் கால், அவையே குற்றமாகி ஒழிந்தன. புகுதப்பெறுவான் செல்லு மென்றஞ்சியென்பது. வசையற நாடின் என்றதனான் இங்ங்னங் குற்றமென்று வரையப்பட்டனவற்றைக்கொண்டு புகுந்து மற்றொரு பொருள் கொள்ளின் அவை வசையற்றனவாமென்பது. அவை கூறியது கூறன், 2மாறுகொளக்கூறல், மிேகைபடக்கூறல், பொரு ளில் மொழிதன் மயங்கக்கூறல் என்னும் ஐந்துமாயின. கூறியது கூறல் முன்னொருகாற் சொல்லிய பொருள் பின்னுமொருகாற் சொல்லுதல்; அது, 'உட்குவரத் தோன்று மீரேழ் துறைத்து’’ (தொல்-புறத் 1) எனவும், - 'வந்தவீரேழ் வகையிற் றாகும்’ (தொல்-புறத்:3) எனவும் இருகாற்சொல்லி ஒருகாற் பயன்கொண்டவாறு. 2மாறுகொளக்கூறல் 'மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை (தொல்- எழுத்குற் :10) என்றவழிப் புல்லினையும் மரமென அடக்குதல். இக் கருத்து நோக்கி (யும்) (யே) போலும் ; ஆண்டு