பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蟹登醇 தொல்காப்பியம் மை' என்றாற்போல் வன கொள்க. இவை மேல் ஈரைங்குற்றமு மென உம்மையால் தழுவியவற்று விரியாயின. முதனூலொடு மாறுதலும் யாப்பினுட் சிதைதலும் இவைபோல ஒரோ வழி வாரா அந்நூலின் முழுவது உங் கொள்ளக்கிடந்தமையின் ஈண்டவை புறனடையால் தழுவப்பட்டவாறென்பது. இவை யெல்லாங் குற்றமென்று களையப்படுனவாயினும் ஈரைங் குற்றமு மின்றியென முதற்குத்திரத்துள் ஒதிப்புகுந்தான். அல்லாக்கால் இவற்றுட் சில நூலுட் புகுதுமாறும் அவற்றாற் பயன்கொள்ளு மாறும் இன்மையினென்பது. பயன்கொள்ளப்படுவன ஐந் தென்பது மேற்காட்டினாம். இனி, அப்பதினான்குங் குற்றமேயாகி வருமாறு: " தன்மை யுவமை யுருவகந் தீவகம் பின்வரு நிலையே முன்ன விலக்கே வேற்றுப் பொருள்வைப்பு வேற்றுமை யெனாஅ’’ எனவும், ' உருவக முவமை வழிநிலை மடக்கே விரிசுடர் விளக்கென மரீஇ வருவன’’ எனவுஞ் சில சூத்திரங்களை முதனிற்இப் பின்னரும் அவ்வாய் பாட்டானே, " தன்மை யுவமை யுருவகத் தீவகம் பின்வரு நிலையே முன்ன விலக்கே வேற்றுப் பொருள்வைப்பு வேற்றுமை யென்றாங் கெண்வகை"யியல் செய்யுட் கணியென மையறு புலவர் வகுத்துரைத் தனரே' என்றாற்போலப் பின்னரும் அவ்வாறே சூத்திரஞ்செய்தல் கூறியது கூறலாய்ப் பயன்படாதாயிற்று. என்னை? இவற்றது வேறுபாடு தொகைச் சூத்திரத்துத் துணிந்தெண்ணியதனானே பெற்றவழிப் பின்னும் அவ்வாறே மற்றோர் சூத்திரஞ் செய்தத னாற் பயந்ததின்மையினென்பது. ' அன்றென. வொருதலை துணிந்த குற்ற நன்றறி புலவர் நாட்டுதற்குரிய' என்றாற்போல்வன வரையாது குற்றமென்றதனையே சான் றோர்க்காயிற் குற்றமாகாதென்றல் மாறுகொளக் கூறலாம்,