பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தொல்காப்பியம் "ஈரைங் குற்றமுமின்றி' raj தில்லது அவற்றை நாட்டிக்கொண்டு எதிர் மறுத்துக் கோடல் பெறாம்ைபின் இது கூறினானென்பது. ஆய்வுரை : இது நூலுக்குரிய குணங்களாமாறு கூறுகின்றது. (இ-ன்) மேற்குறித்து பத்துக் குற்றங்களையும் எதிர் மறுத்து உணர்ந்து கொள்ளுதற்குரிய குணங்கள் பத்தும் மேற் குறித்த நூலுக்குரிய இலக்கணங்களாம் எறு. துரலுக்கு அமைய வேண்டியனவாகவுள்ளனவற்றை எடுத் துக் கூறுதலோடு, நூலுட் புகுதற்கு உரியனவற்றை எடுத்துக் கூறுதலும் நூற்குரியதோர் இலக்கணமே என்பதனை அறிவுறுத் துவார் நூலில் இடம் பெறாத குற்றங்களையும் எடுத்துக் கூறி னார் ஆசிரியர். எனவே, முற்கூறிய பத்துக் குற்றங்களை எதிர் மறுத்துக் கொள்ளப்படும் பத்துக் குணங்களும் நூலுக்குரிய இலக்கணமாம் என்பார் எதிர் மறுத்துணரின் திறத்தவும் அவையே என்றார். மேற்குறித்த குற்றங்களையெதிர் மறுத்துக் கொள்ளுதலாவது, கூறியது கூறாமை, மாறுகொளக் கூறான்ம் குன்றக் கூறாமை, மிகைபடக் கூறாமை, பொருளில மொழியா ம்ை, மயங்கக்கூறாமை, கேட்போர்க்கு இன்னா யாப்பினை யுடையதாகாமை, பழித்த மொழியான் இழுக்கம் கூறாமை, தன் னான் ஒரு பொருள் கருதிக் கூறாமை, என்னவகையினும் மனங் கோளின்மையில்லாமை என இவ்வாறு கொள்ளுதல். சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் நவின்றோர்க் கிணிமை நன்மொழி புணர்த்தல் ஒசை யுடைமை ஆழமுடைத் தாதல் முறையின் வைப்பே உலகமலையாமை விழுமியது பயத்தல் விளங்குதாரணத்த தாகுதல் நூலிற் கழகெனும் பத்தே' என வரும் நன்னூல்-பாயிரம்-மயிலை நாதர் உரைமேற் கோட் சூத்திரம் நூலுக்குரிய குணங்களாகிய பத்தழகினையும் விரித்துக் கூறுவதாகும். (හී ගීණි)