பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரையியல் 205 பிறவாறுகொளப்படுவன மாட்டெறிதல், சொற்பொருள் விரித்தல், ஒன்றென முடித்தல், தன்னின முடித்தலென்பன. இவற்றுள் மாட்டெறிதலாவது முன்னொரு பொருள் கூறிப் பின்வருவதும் அதுபோலு மென்றல். அஃதாவது உகர விறுதி அகரவியற்றே (உயிர் மயங்கியல் டு.) என வரும். சொற்பொருள் விரித்தலாவது - ப தந்தோறும் பொருள் 4K, 3 ثاني விரித்துக் கடாவும் விடையுங் கூறுதல். ஒன்றென முடித்தல் தன்னின முடித்தலென்பது சொல்லப் பட்ட வாற்றான் வருமுத்திரமேயாகத் தொகைப்பட முடியும் இனவுஞ் சிலவாசிரியர் மதம் பலவுத்திக்கும் ஏற்கும் ஒரு சூத்திரம் இந்நூலகத்துள் ....பொருள் கொண்டாமாயினும் ஈண்டுரைத்த பாகுபாடெல்லாவற்றிற்கும் இந்நூலகத் துதாரணமே கண்டு கொள்க. இன்னுஞ் சொல்லியவல்ல பிறவென்றதனான் யாற்றெழுக்கு அரிமானோக்கு தவளைப் பாய்த்துள் பருந்து விழுக்கா டென்னுஞ் சூத்திரக் கிடக்கையும் ஆதிவிளக்கு மத்திம தீபம் இறுதிவிளக்கு என்னும் பொருள் கோனிலையுங் கொள்ளப்படும். யாற்றொழுக் காவது கருதியபொருளை வழுவமாற் சூத்திரம் ஒழுங்குபடக் கிளத்தல், அரிமானோக்காவது முன்னும் பின்னுங் கூறுகின்ற விரண்டு சூத்திரத்தினையு மிடைநின்ற சூத்திரம் நோக்குதல். தவளைப்பாய்த்துளாவது இடையறுத்தோடுதல். பருந்து விழுக் காடாவது அவ்வதிகாரத்துட் பொருத்தமில்லாத பொருள் யாதானு மொருகாரணத்தால் இடைவருதல். ஆதிவிளக்காவது சூத்திரத்தினால் ஆதியின் அமைத்த பொருள் அந்தத்தளவு மோடுதல். மத்திம தீபமாவது இடைநின்ற பொருள் முன்னும் பின்னும் நோக்குதல். இறுதிவிளக்காவது இறுதி நின்றபொருள் இடையு முதலு நோக்குதல். இது முறையானே இறுதிக்கணின்ற முப்பத்திருவகை யுத்தியுங் கூறி மற்றும் இந்நூலுள் அதிகாரம் மூன்றற்கும் வேண்டும் புறனடையுங் கூறுதலுதவிற்று. (இ-ள்) : ஒத்தகாட்சி புத்திவகை விரிப்பின் - முற் கூறிய குற்றங்களோடு ஒப்பத்தோன்றுந் தோற்றத்தினை உடைய வாகிய உத்திக் கூற்றினை விரித்துச் சொல்லின்.